திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

ஒன்னு போனா இன்னொன்னு இலவசம்.. அபாய கட்டத்தில் இருக்கும் 3 போட்டியாளர்கள், பிக்பாஸை விட்டு வெளியேறப் போவது யார்?

Biggboss 7: பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் கானா பாலா வெளியேறி இருந்தார். அதையடுத்து இந்த வார நாமினேஷனில் எட்டு பேர் சிக்கினார்கள். அதில் மூன்று போட்டியாளர்கள் இப்போது அபாய கட்டத்தில் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் அல்ல இரண்டு பேர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். ஏனென்றால் இந்த வார தொடக்கத்திலேயே பிக் பாஸ் அறிவித்தபடி இரண்டு பேர் உள்ளே வர இருக்கின்றனர். அதன்படி ஒன்னு போனா இன்னொன்னு இலவசம் என்ற கதையாக இந்த வார எவிக்சன் நடைபெற உள்ளது.

அதன்படி இப்போது கடைசி மூன்று இடங்களில் அக்ஷயா, மாயா, பூர்ணிமா ஆகியோர் இருக்கின்றனர். இதில் அக்ஷயா எப்போதோ வெளியேற வேண்டியவர். ஆனால் இவ்வளவு நாள் அவர் தாக்குப் பிடித்து விட்டார். தற்போது போட்டிகள் கடுமையாகி விட்ட நிலையில் அவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.

Also read: பிக்பாஸ் பூகம்ப டாஸ்க்கால் கிளம்பும் பூதம்.. விசித்ராவை போல் ஆண் போட்டியாளருக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்

அதற்கு அடுத்ததாக பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பூர்ணிமாவும் இந்த வாரம் வெளியேறுகிறார். மாயாவுடன் சேர்ந்து கொண்டு இவர் பிக் பாஸ் வீட்டில் செய்த அக்கப்போர்கள் பார்வையாளர்களை தொடர்ந்து கடுப்பேற்றி வந்தது. அதனாலயே இவரை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பொங்கி வந்தனர்.

ஆனால் நாமினேஷனிற்கு வந்தாலும் இவர் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு தான் வந்தார். இப்படி பல வாரங்கள் தப்பித்து வந்த பூர்ணிமா இந்த வாரம் வெளியேறுவது மிகப்பெரிய ட்விஸ்ட் தான். இருப்பினும் இதன் பிறகு மாயாவின் ஆட்டம் எப்படி திசை மாறும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது.

Also read: மந்திரவாதி தந்திரவாதி யாருடைய பாட்ஷா பலிக்கும்.? முதுகில் குத்தி டைரக்ட் நாமினேஷனுக்கு வந்த கேப்டன்

Trending News