திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கைவிடப்பட்ட கொரோனா குமார்.. அடுத்தடுத்து சிம்புவுக்காக காத்து கிடக்கும் 2 இயக்குனர்கள்

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருந்த சிம்பு தற்போது ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

இதனாலேயே இந்த படத்திற்கு இப்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடித்துள்ள நிலையில் சிம்பு அடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்பு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளாராம். அங்கு சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு திரும்பி வரும் அவர் அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்.

Also read: வசூலில் சிம்பு, சிவகார்த்திகேயனை தூக்கி சாப்பிட்ட லவ் டுடே பிரதீப்.. அடுத்த டார்கெட் லோகேஷன் கைதியாம்

அந்த வகையில் தற்போது அவரிடம் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா இருவரும் கதை கூறி இருக்கின்றனர். இவர்கள் இருவரில் ஒருவரின் படத்தில் தான் சிம்பு நடித்த இருக்கிறார். அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பள விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது.

அதனால் அப்படம் ஆரம்பிக்கப்படுமா என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது. அதனால் ஏ ஆர் முருகதாஸ், சிம்புவுடன் இணைந்து பணி புரிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாரை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் அதன் பிறகு எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை.

Also read: வேதாளம் போல் மீண்டும் முருங்கை மரம் ஏறிய சிம்பு.. பழைய அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்த எஸ்டிஆர்

இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் டைரக்சன் பக்கம் திரும்பி இருக்கிறார். மேலும் சிம்புவின் நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் திரைப்படம் தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் என்ன காரணத்தினாலேயோ இழுத்தடித்து கொண்டே வந்தது.

தற்போது சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அந்த திரைப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக கைவிடப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு அந்த திரைப்படம் மீண்டும் தொடங்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Also read: நடிப்பிலும் ஒரு கை பார்க்கப்போகும் லோகேஷ் கனகராஜ்.. வெளிவந்த சிம்பு பட அப்டேட்

Trending News