பிப்ரவரி 6ஆம் தேதியிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி அடையும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஒருநாள் தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் முறையிலும், டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது தென்னாபிரிக்க அணி.
அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளும், மூன்று 20 ஓவர் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. இப்பொழுது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுகிறார். அவரும் காயத்தில் இருந்து விடுபட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக களமிறங்க காத்துக்கொண்டிருக்கிறார்.
பழைய வீரர்கள் அனைவரும் காயத்தில் இருந்து விடுபட்டு வருவதால் இந்த தொடரில் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அல்லாது புதிதாக இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் பயிற்சியில் உதவி செய்யும் விதமாக இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் சாருக்கான் ஆகிய இருவரும்தான் இந்திய அணியில் தற்போது இடம் பெற்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்களின் பங்களிப்பு தமிழக அணிக்கு வேற லெவலில் இருந்துள்ளது. அதிலும் சாருக்கான் சிக்ஸர் அடிப்பதில் வல்லவராம். கடைசி பந்தில் சிக்சர் அடித்து தமிழகத்திற்கு ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.