Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் வித்தியாசமான விறுவிறுப்பான கதையை கொண்டு வந்து மக்களின் ஆதரவை கடந்த இரண்டு வருஷமாக பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது திருவிழா மற்றும் அப்பத்தா நிகழ்ச்சி கோலாகலமாக ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்கள் இருக்கப் போகிறது.
அதாவது கதிர், கரிகாலன், குணசேகரன், வளவன் இவர்களின் பிளான் படி ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவிற்கு மொத்தமாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள். அதே மாதிரி கதிர் கதையை முடிக்க வேண்டும் என்று ஜீவானந்தம் மற்றும் கௌதம் முடிவெடுத்திருக்கிறார்கள். இதற்கிடையில் யாருக்கு என்ன ஆகப்போகிறது என்பதுதான் ட்விஸ்டாக மாறப்போகிறது.
இதனைத் தொடர்ந்து ஒருவேளை குணசேகரன் கேரக்டரை இதோட நிறுத்திக் கொள்ளலாம் என்று அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுவது போல் கூட கதை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்த வேலராமமூர்த்தி அந்த அளவிற்கு செட்டாகவில்லை. இதனால் அந்த கதாபாத்திரத்தை அப்படியே க்ளோஸ் பண்ணப் போகிறார்கள்.
இதில் புதிதாக வந்த குணசேகரன் உடைய நடிப்பு பிடிக்காமல் டிஆர்பி ரேட்டிங் மிகவும் குறைந்துவிட்டது. அந்த வகையில் மீண்டும் அவர் நடித்தால் அதற்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.அதற்கு பதிலாக இருப்பவர்களை வைத்து விறுவிறுப்பாக மக்களுக்கு பிடித்தமான கதையை உருவாக்கப் போகிறார்கள்.
ஆனால் என்னதான் இருந்தாலும் கடந்த இரண்டு வருஷமாக டிஆர்பி ரேட்டிங்கில் சிம்ம சொப்பனமாக இருந்த இந்த நாடகம் தற்போது ஓரங்கட்டும் அளவிற்கு பின்னாடி போய்விட்டது. இந்த கேப்பில் மற்ற இரண்டு சேனல்கள் நாடகத்தை கொண்டு வந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. அதில் விஜய் டிவியில் தற்போது அனைவரது ஃபேவரிட் நாடகமாக முதல் இடத்தை பிடித்திருக்கிறது சிறகடிக்கும் ஆசை.
அடுத்ததாக இதுவரை சன் டிவிக்கு எதிராக விஜய் டிவி மட்டும் தான் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. ஆனால் தற்போது இவர்களுக்கு நடுவில் ஜீ தமிழ் சேனலும் புகுந்து விட்டது. இதில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வருகின்ற இதயம் சீரியலை மக்கள் அனைவரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள். அதற்கு காரணம் வித்தியாசமான கதையும் இணை புரியாத பந்தத்தில் ஏற்படும் காதல். இப்படி இந்த இரண்டு சீரியல்கள் வந்ததால் மொத்தமாகவே எதிர்நீச்சல் டம்மியாகி கொண்டே போகுது.