இந்திய அணியில் அதிரடி இளம் வீரர்களுக்கு ஒரு காலத்தில் பஞ்சம் நிலவி வந்தது. ஆனால் இப்பொழுது ஐபிஎல் போன்ற போட்டிகள் வந்ததிலிருந்து பல திறமை வாய்ந்த இளம் அதிரடி ஆட்டக்காரர்கள் உருவாகியுள்ளனர். ஒரு போட்டியில் ஒருவர் விளையாடவில்லை என்றால் அவரது இடம் பறிபோகி விடுகிறது. அந்த அளவிற்கு இந்திய அணியில் வீரர்களின் பட்டியல் குவிந்து கிடைக்கிறது.
தற்போது நடைமுறையில் உள்ள போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு வீரர்களை கொண்ட அணியை இந்தியா உருவாக்கி வைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு என்று ஒரு அணி, ஒரு நாள் போட்டிகளுக்கு என்று மற்றொரு அணி. 20 ஓவர் போட்டி என்றால் இளம் படைகளைக் கொண்டு செயல்படும் ஒரு அதிரடி அணி என இந்தியாவின் நிலைமை மாறி உள்ளது.
Also Read: மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்தபோது இந்திய அணிக்குள் பல சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய அணியில் அணில் கும்ளே தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்திலிருந்தே, விராட் கோலிக்கு ஒரு செக் வைக்கப்பட்டது. விராட் கோலியின் ஆளுமை இந்திய அணியில் ஜாஸ்தியாக இருந்தது. அவருக்கு ஆதரவான வீரர்களை தான் அணியில் வைக்கிறார் என்ற ஒரு சர்ச்சை கருத்து நிலவி வந்தது.
இப்பொழுது அந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருப்பவர் ராகுல் டிராவிட். இவர் வந்ததற்கு பின்னர் இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. எல்லா வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணி கோப்பையை வென்று பெருமை தேடித் தருகிறது.
Also Read: கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்
இளம் வீரர்களின் வருகை இந்திய அணியின் சீனியர் வீரர்களின் இடத்திற்கு கேள்விக்குறியாக மாறி உள்ளது. அப்படி வந்தவர்களின் சிறப்பான செயல்பாடுகள் உலக அளவில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் வாயை பிளக்க செய்துள்ளது, சுப்மன் கில் மற்றும் இஷான் கிசான் இருவரும் இந்திய அணியின் எதிர்கால தூண்களாக விளங்கி வருகின்றனர். இவர்களின் நேர்த்தியான அதிரடி ஆட்டம் 20 போட்டிகள் விளையாடுவதற்குள் பல ரெக்கார்டுகளை படைத்துள்ளது.
இதனால் இந்திய அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. ஷிகர் தவானின் இடத்தை சுப்மன் கில்லும், ரிஷப் பந்தின் இடத்தை இஷான் கிஷானும் தட்டிப் பரித்துள்ளனர். இப்பொழுது இவர்களின் வருகை இந்த இரண்டு வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.
Also Read: கிடைத்த வாய்ப்பும் பறிபோனது.. இந்திய அணியிலிருந்து கைவிடப்பட்ட சஞ்சு சாம்சன்