வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2022ல் மெர்சல் செய்த டாப் 5 ஹீரோக்கள்.. அஜித், விஜய்யை ஓரங்கட்டி தண்ணி காட்டிய தமிழ் நடிகர்

இந்திய சினிமாவிற்கு 2022 ஆம் ஆண்டு ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஒட்டுமொத்த திரையுலகமும் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த ஆண்டு நிறைய நல்ல படங்கள் ரிலீசாகின. இந்த ஆண்டு தான் நிறைய பான் இந்தியா படங்களும் ரிலீஸ் ஆகின. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன், ரிஷப் ஷெட்டியின் காந்தார திரைப்படம் இந்திய சினிமாவுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.

ஜுனியர் என்டிஆர்: ஜுனியர் என்டிஆர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் பின்னணி பாடகராகவும்,குச்சிப்புடி நடன கலைஞரும் ஆவார். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இயக்குனர் ராஜ மௌலி இயக்கத்தில் இவர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. 550 கோடியில் உருவான இந்த திரைப்படம் 1200 கோடி வசூல் செய்தது.

Also Read: 60 வயசுல இப்படி ஒரு எனர்ஜியா? லோகேஷ் போட்ட ஒரே கண்டிஷனால் வெறிபிடித்து அழையும் மன்சூர் அலிகான்

யாஷ்: யாஷ் கன்னட சினிமா உலகின் முன்னணி ஹீரோ. KGF-1 திரைப்படத்தின் மூலம் இந்திய திரை ரசிகர்களுக்கு பரிட்சயமானார். கன்னட சினிமாவில் அதிக வசூல் செய்த படம் இது. இந்த படத்தின் தாக்கத்தினால் KGF-2 மிகப்பெரிய வெற்றியடைந்தது மட்டுமில்லாமல் இந்திய அளவில் யாஷுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.

துல்கர் சல்மான்: துல்கர் சல்மான் மலையாள சினிமா உலகின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராவார். வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி திரைப்படங்களின் மூலம் பிரபலமானார். இந்த ஆண்டு ஆகஸ்டில் இவர் நடிப்பில் வெளியான சீதா ராம் திரைப்படம் இளைஞர்களிடையே ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தில் துல்கர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Also Read: ரஜினிக்கு வந்த கூட்டத்தில் 50% கூட கே.ஜி.எஃப், பாகுபலிக்கு வரல.. என்ன படம் தெரியுமா?

மாதவன்: மணிரத்தின் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு ரிலீசான அலைபாயுதே படத்தின் மூலம் சாக்லேட் பாயாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மாதவன். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தவர். இந்த ஆண்டு இவர் இயக்கி நடித்த ராக்கெட்டரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழா வரை சென்று பெருமை சேர்த்து.

கமலஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் இந்த டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக இந்த ஆண்டு அமைந்துவிட்டது. மேலும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது.

Also Read: 70, 80களில் ஹீரோ, வில்லன் இரண்டிலும் பேர் வாங்கிய நடிகர்.. கமல், ரஜினிக்காக செய்த தியாகம்

Trending News