திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2 வது கல்யாணமா? அவர மட்டும் பண்ணிக்காதீங்க.. சானியா மிர்சாவுக்கு அட்வைஸ்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு தான் ஃபார்மில் இருக்கும் போது, ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன், இரட்டையர் பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1, நான்குமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றனர்.

இப்படி நாட்டிற்காக பல்வேறு சாதனைகளை படைத்து, டென்னிஸில் இந்தியாவில் உலகை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றனர். இவருக்கு ரசிகர்களும் அதிகம். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு உயரங்களை எட்டி, இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

டென்னிஸ் உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சானியா மிர்சா, தனது குழந்தைப் பருவ நண்பர் சோராப் மிர்சாவுடன் திருமண நிச்சயம் செய்திருந்த நிலையில், அந்த நிச்சயம் ரத்தானது. அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் 2010 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடந்தது. இத்தம்பதிக்கு ஐந்து வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரியில் சானியா மிர்சா தன் இன்ஸ்டாவில் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, சோயிப் மாலி, பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துகொண்டார். சனாவுகு ஏற்கனவே காந்த 2020 ஆம் ஆண்உ உமைர் என்ற பாடகருடன் திருமணமான நிலையில் அவர்கள் பிரிவுக்குப் பின் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சோயிப் மாலிக்குக்கு இது 3 வது திருமணமாகும்.

பிரபல கிரிக்கெட் வீரருடன் சானியா மிர்சாவுக்கு திருமணம் என வதந்தி!

இந்த நிலையில் சானியா மிர்சா மறுமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். விவாகரத்துக்குப் பின் தன் மகனுடன் நேரத்தை செலவழித்து வரும் சானியா மிர்சா, கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்து கொள்வதாக வதந்திகள் பரவின.

குறிப்பாக சமூக வலைதள பக்கத்தில் சானியா மிர்சாவுக்கு ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். அப்படி ஒருவ்ர் பிற மதத்தை சேர்ந்தவரை மணக்க வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில், சானியா மிர்சாவின் தந்தை இதெல்லாம் ஆதராமற்றவை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Trending News