ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

2வது வீரராக அப்பா மகனுடன் விளையாடப் போகும் இரண்டு வீரர்கள்.. பிரமிப்பூட்டும் சாதனையை நோக்கி விராட் கோலி

கிரிக்கெட் விளையாட்டு 15 முதல் 20 ஆண்டுகள் வரை உடற்தகுதி இருந்தால் விளையாடலாம். ஒரு வீரர் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அணியில் தொடர்ந்து விளையாடலாம். இப்படி விளையாடுவதற்கு அவருடைய உடற்தகுதி மிகவும் அவசியம். அப்படி அதிக ஆண்டுகள் விளையாடிய விளையாடியவர்களை எளிதில் பட்டியலிடலாம்

நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடினால் மட்டுமே இரண்டு தலைமுறை வீரர்களுடன் விளையாட முடியும். அந்தச் சாதனையை இதுவரை மூன்று பேர் நிகழ்த்தியுள்ளனர். 10 வருடங்களுக்கு மேல் இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின், இப்பொழுது இவர்கள் இருவரும் அப்பா வீரருடன் விளையாடிவிட்டு அவரது மகனுடனும் விளையாட இருக்கிறார்கள்.

இந்திய அணி தற்சமயம் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தான் இப்பொழுது அஸ்வின் மற்றும் விராட் கோலி சாதனை படைக்க உள்ளனர். ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் 12 வருடங்கள் விளையாடி வந்த வீரர் சிவனரைன் சந்தர்பால். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் .

இப்பொழுது இவரின் மகனான டேங்கரின் சந்தர்பால் மேற்கிந்தியதீவுகள் அணிக்காக விளையாட வந்துவிட்டார். இவருடன் தான் இப்பொழுது அஸ்வின் மற்றும் விராட் கோலி விளையாட உள்ளனர். இப்படி இவர்கள் இரண்டு தலைமுறை வீரர்களுடன் விளையாடுவதில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இவர்களைப் போல முதல் வீரராக தந்தை மற்றும் மகனுடன் விளையாடி உள்ளார். அவர் இந்திய அணிக்காக 22 வருடங்கள் விளையாடி தனது வாழ்க்கையை கிரிக்கெட் விளையாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இவர்தான் முதன் முதலாக இந்த சாதனையை படைத்த வீரர்

சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஜிஎஃப் மார்ஸ் மற்றும் ஷேர் மார்ஸ் ஆகியோர்களுடன் விளையாடி உள்ளார், தந்தை மற்றும் மகனுடன் விளையாடுவதை ஏற்கனவே சச்சின் 15 வருடங்களுக்கு முன்பே செய்துவிட்டார் . இந்திய அணிக்காக அதிக ஆண்டுகள் விளையாடிய முதல் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்.

Trending News