Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஒரே நாளில் 3.5 மில்லியன் வியூஸ்! ‘ஆச்சி ஆச்சி’ பாடல் படைத்த சாதனை!

ஒரே நாளில் 3.5 மில்லியன் வியூஸ்! ‘ஆச்சி ஆச்சி’ பாடல் படைத்த சாதனை!

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’படத்தின் முதல் பாடலான ‘ஆச்சி ஆச்சி’தற்போது யூடியூபில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.நேற்று வெளியான இந்தப் பாடல்,வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.குறிப்பாக, தற்போது 3.5 மில்லியன் பார்வைகளையும் தாண்டி தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.வைஷாலி சமந்த் மற்றும் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். மேலும்,கதீஜா ரஹ்மான் உள்ளிட்டோர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளனர். பாடலின் மலையாள வரிகளை விநாயக் சசிகுமார் எழுதியுள்ளார்.


இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோவில் சாய் பல்லவி இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான கெட்டப்பில் இடம்பெற்றுள்ளார்.குறிப்பாக, ஷார்ட் ஹேர்,கலர்ஃபுல்லான உடைகள் என அவருடைய புதிய கெட்டப் ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது.காதல்,திருமணம்,தாய்மை என ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அழகான ஓவியங்கள் மூலம் பாடல் காட்சிப்படுத்துகிறது.மேலும்,இந்தப் பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் சவுத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


மணிரத்னம்–ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.இப்படம் 2027 ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. முதல் பாடலுக்கே இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளதால்,அடுத்தடுத்த பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.