புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திரிஷாவை பொத்தி பொத்தி பார்த்துக்கொள்ளும் 3 நடிகர்கள்.. திமிருக்கும், வளர்ச்சிக்கும் இது தான் காரணமா

சினிமாவில் 15 வருடங்களுக்கு மேலாக ஒரு நடிகை ஹீரோயின் ஆகவே தொடர்ந்து நடித்து வருவது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் திரிஷா அன்று 5 லட்சம் சம்பளம் வாங்கி தற்போது 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவரது படங்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ந்த அவருக்கு பட வாய்ப்பு வந்த வண்ணமே உள்ளது. திரிஷா படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டார், ரசிகர்களுடன் பேசமாட்டார், திமிர் பிடித்தவர் என்று கூறினாலும் அவருக்குப் பெரிய பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதாவது திரிஷாவின் வளர்ச்சிக்கும், தற்போது வரை அவரின் திமிருக்கும் முக்கிய காரணம் அவருடன் இருக்கும் 3 நடிகர்கள்தானம். இவர்களால்தான் தற்போது திரிஷாவுக்கு வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. அந்த மூன்று பேர் யார் என்றால் ஒருவர் ஒல்லிக்குச்சி நடிகர், இன்னொருத்தர் பலசாலியான நடிகர், மற்றொருவர் மாஸ் நடிகர். இதனை கே ராஜன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இவர்களால்தான் தற்போது திரிஷாவின் சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே திரிஷா தனது சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஒரு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே அந்த உறவை முடித்துக் கொண்டார்.

அதன்பிறகு நடிகர் ராணா டகுபதியை காதலித்து வந்தார். இதுவும் பாதியிலேயே பிரேக்கப் ஆனது. இது தொடர்ந்து ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சிக்கினார். இவ்வளவு கடந்தும் திரிஷாவின் வெற்றிக்குப் பின்னால் இந்த மூன்று நடிகர்களும் உள்ளனர்.

தற்போது வரை அவர்களது ஊக்கத்தினால் தான் த்ரிஷா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். மேலும் மோகன்லாலுடன் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News