ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விளம்பரங்களில் நடிச்சு சினிமா வாய்ப்பை பெற்ற 3 நடிகைகள்.. லட்டு மாதிரி சான்ஸை தூக்கி கொடுத்த சந்தானம்

3 actresses got the opportunity to act in advertisement: திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு ஆரம்ப காலத்தில் அவ்வளவு எளிதாக சினிமா வாய்ப்பு கிடைத்திராது. சிலர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுப்பார்கள். இன்னும் சிலர் குறும்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து அதன் மூலம் பேமஸ் ஆகி, பட வாய்ப்பு பெறுவார்கள். அப்படி விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய மூன்று நடிகைகளை பற்றி பார்ப்போம்.

ஜெயா சீல்: நெஸ்கபே சன்ரைஸ் விளம்பரத்தில் நடித்து, அது பெரிய ஹிட் ஆகி அதன் மூலம் நடிகர் பிரபுதேவா உடன் ‘பெண்ணின் மனதை தொட்டு’, பின் விக்ரமின் ‘சாமுராய்’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை ஜெயா சீல்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, ஆங்கிலம் என பிற மொழி படங்களிலும் வரிசையாக நடித்தார். பின்பு சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கியதும் தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துக் கொண்டிருந்த ஜெயா சீல், கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல கிளாசிக் தபேலா பிளேயர் பிக்ரம் கோசை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Also Read: சிவகார்த்திகேயனை பார்த்து ஆசைப்பட்டது தப்பா போச்சு.. அல்லோலப்படும் SK-இன் உயிர் நண்பன்

சந்தானம் பட நடிகைக்கு அடித்த ஜாக்பாட்

விசாகா சிங்: ஃபேர் அண்ட் லவ்லி மற்றும் விவில் சோப்பு விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவர் நடிகை விசாக சிங். இவர் தமிழில் பிடிச்சிருக்கு என்ற படத்தில் மூலம் அறிமுகமானாலும், சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் மூன்று பேர் துரத்தி துரத்தி லவ் பண்ண கூடிய சௌந்தர்யாவாக நடித்ததன் மூலம் செம பேமஸானார்.

இந்த படத்தை தயாரித்த சந்தானம், விஷாகா சிங்கை விளம்பரத்தில் பார்த்து தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிப்பதற்கான சான்ஸை லட்டு மாதிரி தூக்கி கொடுத்தார். இப்போது இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அனுஷ்கா சர்மா: ஹிந்தியில் டாப் நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா சர்மா, முதலில் காஸ்மெட்டிக் விளம்பரத்தில் நடித்து, அதன் பின்பு தான் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதுவும் பிடிச்சாலும் புளியங்கொம்பை பிடித்தது போல், தன்னுடைய அழகால் கிரிக்கெட் வீரர் விராட் கோலியவே காதலில் விழவைத்து கல்யாணமும் பண்ணிக்கிட்டார். இந்த தம்பதியர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Also Read: ரொம்ப பிஸின்னு ஆட்டிட்யூட் காட்டும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் சூரி

Trending News