வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

2023 ஆம் ஆண்டு ஜொலித்த 3 பிக் பாஸ் ஹீரோக்கள்.. டாடாவால் கவினுக்கு அடித்த ஜாக்பாட்

Bigg Boss – Dada Kavin : பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொள்வதற்கான காரணம் சில இருக்கின்றது. ஒன்று மக்கள் மத்தியில் மிகவும் சீக்கிரம் பிரபலம் அடைந்து விடலாம். அடுத்ததாக வெள்ளி திரையில் நிச்சயம் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இப்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் படு சூடாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மூன்று பேர் 2023 ஆம் ஆண்டு சினிமாவில் ஜொலித்திருக்கின்றனர். அவர்களது படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலம் அடைந்த ரியோ பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் மூலம் அவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. சமீபத்தில் ரியோ நடிப்பில் ஜோ என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Also Read : 2023ல் மாஸ் காட்டிய டாப் 5 சேனல்கள்.. முதல் இடத்திற்கு கடும் போட்டி போட்ட சன், விஜய் டிவி

இந்த படத்தின் வெற்றி மூலம் ரியோவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் படம் வெளியாகி இருந்தது. இவர் பிக் பாஸ் சீசன் முதலில் கலந்து கொண்டார். சமீபகாலமாக அவரது படங்கள் பெரிய அளவில் போகவில்லை.

ஆனால் இப்போது எம்எஸ் பாஸ்கர் உடன் அவர் நடித்து வெளியான பார்க்கிங் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. மேலும் இந்த ஆண்டு மிகவும் பிரபலம் அடைந்த ஹீரோதான் கவின். சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன் போல் இப்போது கவின் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். டாடா படம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

Also Read : அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நிக்சன்.. டிஆர்பிக்காக ரவுடித்தனத்தை வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Trending News