ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மூன்று ஹீரோக்களுக்கு மரண ஹிட் கொடுத்த 3 இயக்குனர்கள்.. ஷங்கரால் ஏற்பட்ட விருட்சம்

Director Shankar : பெரிய ஹீரோக்களுக்கு மரண ஹிட் கொடுத்து அவர்களது கேரியரில் அதிக வசூல் செய்த படம் கொடுத்த இயக்குனர்களுடன் மூன்று முறை கூட்டணி போட்டு உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமையும் இருந்த வருகிறது. அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இயக்குனர் ஷங்கர் ரஜினியின் கேரியரில் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதாவது ரஜினியின் கேரியரில் திருப்புமுனையாக இருந்த சிவாஜி படம் ஷங்கரால் தான் இயக்கப்பட்டு இருந்தது. அதன்பின்பு ரஜினிக்கு மரண மாஸ் ஹிட்டாக அமைந்தது தான் எந்திரன் மற்றும் 2.0 படங்கள்.

ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்ட இந்த படங்கள் தமிழ் சினிமாவில் இப்போதும் இதன் வசூலை முறியடிக்க முடியாமல் திணறி வருகிறது. இவ்வாறு ஷங்கர் ரஜினிக்கு சிவாஜி, எந்திரன், 2.0 என தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்திருந்தார். அடுத்ததாக அட்லீ தளபதிக்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

Also Read : அரசியல் அழுத்தத்தால் தடுமாறும் இயக்குனர் ஷங்கர்.. ஏட்டிக்கு போட்டியாக ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் ஹீரோ

அதாவது விஜய்யின் பிகில், மெர்சல் மற்றும் தெறி ஆகிய திரைப்படங்களை அட்லீ தான் இயக்கி ஹட்ரிக் வெற்றியை கொடுத்திருந்தார். இதை அடுத்து சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

அதோடு மட்டுமல்லாமல் அடுத்ததாகவும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த மூன்று இயக்குனர்களில் இடமும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது ஷங்கரிடம் அட்லீ உதவி இயக்குனராக வேலை பார்த்தார். இதைதொடர்ந்து அட்லீ இடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் தான் சிபி சக்கரவர்த்தி.

Also Read : நேத்து வந்த பையன் கிட்ட தோத்துப்போன ரஜினி.. வாழ்க்கை கொடுத்த அப்பாவை வச்சு செஞ்ச மகள்

Trending News