வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல்முறையாக 50 கோடி லாபத்தை சுருட்டிய 3 படங்கள்.. ரஜினிக்கு முன் வசூல் மன்னனாக ஜெயித்த விஜய்

3 films that made a profit of 50 crores: ஹீரோவாக ஜொலித்து வரும் முன்னணி ஹீரோக்கள் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் அவர்களுடைய கேரியரில் மறக்க முடியாத குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே டர்னிங் பாயிண்டாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பிற்கும். அத்துடன் இந்த படத்தின் மூலம் தான் அவர்களுடைய மார்க்கெட்டும் அதிகரித்து இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப சில படங்கள் இருக்கிறது.

முக்கியமாக அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவில் முதல்முறையாக 50 கோடி லாபத்தை சுருட்டிய படங்களாக தற்போது வரை பெயர் எடுத்து வருகிறது. அப்படிப்பட்ட படங்களில் யார் ஹீரோவாக நடித்திருக்கிறார், என்ன படங்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். அதிலும் முதன்முதலாக வசூல் மன்னனாக ரஜினிக்கு முன் ஜெயித்துக் காட்டியது விஜய் தான்.

கில்லி: இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து விஜய், வேலு என்ற கதாபாத்திரத்தில் துருதுருவான நடிப்பை துள்ளலுடன் கொடுத்திருப்பார். இப்படம் ஒரு கமர்சியல் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு காதல், காமெடி, சண்டை என அனைத்தும் கலந்திருக்கும். அப்படிப்பட்ட இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று சொல்வதற்கு ஏற்ப ஆல் ரவுண்ட் கில்லியாக இருக்கும். அத்துடன் இப்படம் 8கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி இலாபத்தை பெற்று இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து விட்டது.

Also read: விஜய்க்கு சூர்யா வாய்ப்பு கொடுக்கலைன்னா இப்ப அட்ரஸ் தெரியாம போயிருப்பாரு.. சர்ச்சையை கிளப்பி ஞானவேல்

சந்திரமுகி: பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பனின் மனைவியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து ஒரு மனநலம் மருத்துவராக நடித்திருப்பார். மேலும் வேட்டையின் கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு யார் நடித்தாலும் வெற்றி பெற்று இருக்காது என்பதற்கு ஏற்ப பெயர் வாங்கிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் இப்படம் முழுமையான வெற்றி பெற்றதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலுவின் நகைச்சுவைதான். எத்தனை காலங்கள் ஆனாலும் இந்த நகைச்சுவையை பார்த்து சிரிக்காத ஆட்களை இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு அல்டிமேட் ஆக இருக்கும். மாப்பு வச்சிட்டியேடா ஆப்பு, என்ன லுக்கு, மாப்பிள்ளை என்ன எல்லாம் செத்து கிடக்கு, அது எருமை முருகேசா போன்ற அனைத்து நகைச்சுவையிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இப்படம் கிட்டத்தட்ட 19 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 60 கோடிக்கும் மேல் லாபத்தை வெற்றி பிளாக் பாஸ்டர் ஆகிவிட்டது.

அந்நியன்: சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரம் அம்பி, அந்நியன், ரெமோ என்று மூன்று கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கொண்டு நடிப்பை வெவ்வேறு விதமாக கொடுத்து அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படிப்பட்ட ஒரு படத்தை மறக்கவே முடியாது என்று சொல்லுவதற்கு ஏற்ப தரமான படத்தில் விக்ரம் நடித்து வெற்றி பெற்று விட்டார். இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 57 கோடி லாபத்தை பெற்று விட்டது.

Also read: விஜய் டிவியின் அராத்து நடிகையை தட்டி தூக்கிய ஜீ தமிழ்.. இப்படியா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது

Trending News