தமிழ் சினிமா இப்போது வேற லெவலில் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஹாலிவுட் திரைப்படங்களுக்கே டப் கொடுக்கும் வகையில் தமிழ் திரைப்படங்களில் பல டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் எளிதில் கவரும் விதத்தில் இருக்கிறது.
இதனால் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் கலெக்ஷனில் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் பாக்ஸ் ஆபிஸை கலக்கி கொண்டிருக்கும் மூன்று ஹீரோக்களின் சாதனையை பற்றி இங்கு விரிவாக காண்போம். சொல்லப்போனால் இப்போதைய சினிமாவில் இவர்கள்தான் பாக்ஸ் ஆபிஸ் கடவுள்களாக இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் ரஜினிகாந்தின் திரைப்படங்கள்தான் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அதிக கலெக்ஷனை பார்த்தது. இவரின் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை வசூல் லாபம் பார்த்தது.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக 100 கோடியை தாண்டி வசூல் செய்த திரைப்படமும் இதுதான். அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான எந்திரன், கபாலி போன்ற திரைப்படங்களும் வசூலில் பல சாதனைகள் புரிந்தது. இந்த படங்களை எல்லாம் ஓவர் டேக் செய்யும் வகையில் இருந்தது இவருடைய 2.o திரைப்படம்.
எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. மிக அதிக பொருட்ச அளவில் உருவான இந்த திரைப்படம் ஏறத்தாழ 650 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை என்ற பெருமையும் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கிறது.
கமல்ஹாசன்: சிறு வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கும் இவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் மிகப்பெரிய பொருட்செலவில் கமல் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்த தசாவதாரம் திரைப்படம் 200 கோடி வரை வசூல் செய்தது.
அதைத்தொடர்ந்து அவர் இயக்கி நடித்து இருந்த விஸ்வரூபம் திரைப்படம் பல தடங்கல்களுக்கு நடுவில் ரிலீசானது. இதனால் அந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை காண ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலாக இருந்தது. அதன் அடிப்படையில் இப்படத்தின் வசூல் படக்குழு திட்டமிட்டதை விட அதிகமாகவே இருந்தது.
அதாவது இந்த திரைப்படம் 220 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து சாதனை படைத்தது. அதன் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் சில திரைப்படங்கள் வெளிவந்தாலும் பெரிய அளவில் வசூல் லாபம் பார்க்கவில்லை. மேலும் இவர் பிக் பாஸ், அரசியல் என்று கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.
அதனால் இவருடைய திரைப்படங்கள் 300 கோடி வசூலை தாண்டுமா என்ற ஒரு கேள்வியும் இருந்தது. அதை எல்லாம் சுக்குநூறாக்கம் வகையில் இப்போது அவர் விக்ரம் திரைப்படத்தின் மூலம் வேற லெவல் வெற்றியை பார்த்துள்ளார். இப்படம் மாபெரும் வெற்றி என்பதையெல்லாம் தாண்டி உலக அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறது. 120 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலக அளவில் கிட்டத்தட்ட 420 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது ஒட்டு மொத்த சினிமாவையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தளபதி விஜய்: ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய திரைப்படங்களும் கலெக்ஷனில் முன்னிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மெர்சல் 250 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது.
அதற்கு அடுத்ததாக வெளியான பிகில், மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் ஏறத்தாழ 300 கோடியை நெருங்கி வசூல் சாதனை படைத்தது. இதனால் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்ததால் படத்தின் வசூலில் சிறு மந்த நிலை ஏற்பட்டது. இருப்பினும் அந்த படம் 250 கோடி ரூபாய் வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.