Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நயன்தாரா, திரிஷா மார்க்கெட்டுக்கு போட்டியாக வந்த 3 ஹீரோயின்கள்.. டேட் கிடைக்காமல் தள்ளிப் போகும் படங்கள்

நயன்தாரா, திரிஷா மார்க்கெட்டுக்கு போட்டியாக வந்த 3 ஹீரோயின்கள்.. டேட் கிடைக்காமல் தள்ளிப் போகும் படங்கள்

40 வயதை எட்டிய போதிலும் இன்றும் நயன்தாரா, திரிஷா என்றால் ஒரு கிரஸ் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் ஹீரோக்களுக்கு இணையாக இருவரும் 10 கோடிக்கு மேல் சம்பளம் […]

40 வயதை எட்டிய போதிலும் இன்றும் நயன்தாரா, திரிஷா என்றால் ஒரு கிரஸ் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் ஹீரோக்களுக்கு இணையாக இருவரும் 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.

இப்பொழுது இவர்கள் இருவரது இடத்திற்கும் ஆபத்து வந்துள்ளது. அடுத்தடுத்து 3 இளம் ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் இவர்களது இடத்திற்கு ஆபத்தாக இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் ஏகப்பட்ட ஆபர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இவர்களது டேட் கிடைக்காமல் பல படங்கள் ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

மம்தா பைஜூ: விஜய்யின் ஜனநாயகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மம்தா. ஒரே படம் பிரேமலு இவரை வேற லெவலுக்கு கொண்டு போய் உள்ளது. இப்பொழுது தமிழில் சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அது போக மூன்று, நான்கு படங்கள் கமிட் ஆகியுள்ளார்

ஸ்ரீநிதி செட்டி: கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதிக்கும் தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஒரு பக்கம் அஜித்தின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயின் என்ற பேச்சுக்கள் அடிபடுகிறது. மொத்தத்தில் நயன்தாரா திரிஷா இடத்திற்கு இவரும் ஆபத்தாக நிற்கிறாய்.

கயாடு லோகர்: கன்னடம் மலையாளத்தில் நடித்திருந்தாலும் தமிழில் இவர் அறிமுகமான படம் டிராகன். முதல் படமே சூப்பர் ஹிட். இப்பொழுது இவருக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் வலை வீசி வருகிறார்கள். இதயம் முரளி படத்தில் அதர்வாவுடன் நடித்து வருகிறார். அதுபோக எஸ் டி ஆர் 49 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.