ரஜினி-கமல் நிறைய படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் எம் ஜி ஆர் – சிவாஜி, அஜித்-விஜய் சேர்ந்து நடித்தது அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த கூட்டணியில் இவர்கள் ஒரு படம் நடித்திருக்கின்றனர். அதன் பிறகு இவர்கள் ஒன்று சேரவில்லை.
எம் ஜி ஆர் – சிவாஜி(கூண்டு கிளி): 60 களில் சினிமா உலகில் இரண்டே பிரிவு தான் MGR ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள். எம் ஜி ஆர் – சிவாஜி இணைந்து ஒரு படம் நடித்துள்ளனர். 1954 ல் வெளியான கூண்டுக்கிளி திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். நடிகை டி . ஆர் ராஜகுமாரியின் தம்பி டி .ஆர் ராமண்ணா இயக்கத்தில் இந்த படம் வெளியானது. முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படம் வெற்றியடையவில்லை.
ரஜினி-கமல்: கோலிவுட்டின் மிகப்பெரிய தூணாக இருப்பவர்கள் ரஜினி-கமல். இவர்கள் மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, தப்பு தாளங்கள், இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தாயில்லாமல் நான் இல்லை, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இந்த திரைப்படங்களில் 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி-கமல்-ஸ்ரீதேவி இணைந்து நடித்த 16 வயதினிலே திரைப்படம் 175 நாட்கள் திரை கண்டு மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அஜித்-விஜய் (ராஜாவின் பார்வையிலே): இன்றைய சினிமாவின் இரு பெரும் இமையமாக இருப்பவர்கள் அஜித்-விஜய். இவர்கள் இருவரும் சேர்ந்து 1995 ஆம் ஆண்டு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் நடித்தனர். இந்த படம் தோல்வியை சந்தித்தது.
அஜித் விஜய் மட்டுமில்லாது, சூர்யாவுடன் ‘நேருக்கு நேர்’ ‘பிரண்ட்ஸ்’ என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.