புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்தியா கோப்பையை வென்றதை தாங்க முடியாத 3 வீரர்கள்.. நொட்டை சொல்லி வாயில் வயிற்றில் அடிக்கும் இன்சி பாய்

இந்தியா சும்மா நச்சுன்னு 17 வருடத்திற்கு பின் உலக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.மொத்த இந்தியாவும் இந்த ஆரவார வெற்றியை கொண்டாடி வருகின்றது. ரோகித் சர்மா, விராட் கோலி, மற்றும் ரவீந்திர ஜடேஜா என அடுத்தடுத்து மூன்று சீனியர் வீரர்கள் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து விட்டனர்.

எப்பொழுதுமே இந்தியா வெற்றி பெற்றால் ஒரு மூன்று வீரர்கள் வாயில் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள். பொறாமையின் உச்சத்துக்கே சென்று ஏதாவது நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் இப்பொழுது உலக கோப்பையை வென்று விட்டதால் மொத்த தூக்கத்தையும் கடந்த நான்கு நாட்களாக துளைத்துள்ளனர்.

அந்த மூவரும் அவர்கள் பங்கிற்கு என்னென்ன குற்றச்சாட்டுகள் சொல்ல முடியுமோ அப்படி சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வருகிறார்கள். முதல் ஆளாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் வரிஞ்சு கட்டி வந்துள்ளார்.

நொட்டை சொல்லி வாயில் வயிற்றில் அடிக்கும் இன்சி பாய்

இன்சி பாய், இந்திய வீரர்கள் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டனர் அதனால்தான் எளிதாக விக்கெட் எடுக்க முடிகிறது என கண்டமேனிக்கு உளறி கொட்டுகிறார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்தியா விளையாடுவதற்கு ஏற்ற பிச் உருவாக்கப்படுகிறது என கூறி வருகிறார்.

இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே சென்ற இங்கிலாந்து முன்னால் வீரர் மைக்கேல் வாகன் ஐசிசி இந்தியாவிற்காகவே இந்த உலகக் கோப்பையை நடத்தியுள்ளது. அவர்கள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் காலையில் 10 மணிக்கு ஆரம்பிக்கிறார்கள். மற்றவர்களுக்கு இது போல் சலுகைகள் கிடையாது என கூறி வருகிறார்,

இப்படி இன்சமாம், மைக்கேல் வாகன், ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் இந்தியா உலகக்கோப்பை வாங்கியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சகட்டுமேனிக்கு தங்களது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் அணி கோப்பையை வென்று விட்டால் இவர்கள் வாயை அடைத்திருப்பார்கள். இந்தியா வாங்கியது இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

Trending News