மூன்று வீரர்கள் நல்ல பார்மில் இருக்கும்போது தங்கள் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளனர். 2023 உலக கோப்பையை பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஒவ்வொரு போட்டியையும் மாற்றக்கூடிய திறமை படைத்தவர்கள் இந்த 3 வீரர்கள்.
இன்னும் சில மாதங்களில் தொடங்கவிருக்கும் உலககோப்பை போட்டியை வெல்லும் முனைப்பில் அனைத்து நாடுகளும் செயல்பட்டு வருகையில், இந்த மூவரின் ஓய்வு முடியும் அந்தந்த நாட்டிற்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காகவும், அடுத்த சங்கதிகள் வந்து அணியை உருவாக்குவதற்காகவும் இத்தகைய கடினமான முடிவை எடுத்திருக்கின்றனராம். சமீப காலமாக முன்னணி வீரர்கள் சிலர் 30 வயதை எட்டிய உடனே தங்களது ஓய்வு முடிவை அறிவித்திருக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சியளித்த மூன்று அதிரடி வீரர்களின் விபரம்,
இயான் மோர்கன்: இங்கிலாந்து அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளை குவித்தவர் மோர்கன். இங்கிலாந்து அணிக்காக 2019 ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டன் மோர்கன். இவரின் அனுபவம் 2023 உலக கோப்பைக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.
கிரன் பொல்லாட்: சமீபகாலமாக மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் போட்டிகளில் திணறி வருகையில் இவரது ஓய்வு முடிவு அந்த அணிக்கு சற்று சறுக்கல் ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த இவரது திறமை இனிமேல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேள்விக்குறிதான்.
பென் ஸ்டோக்ஸ்: 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வாங்கியவர் ஸ்டோக்ஸ். மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆன இவர் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் . இவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்காக இந்த கடின முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.