Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அஜித்தின் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் 3 சூப்பர் ஹிட் படங்கள்.. காதல் ரொமான்ஸை தெறிக்க விட போகும் ஜீவா

அஜித்தின் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் 3 சூப்பர் ஹிட் படங்கள்.. காதல் ரொமான்ஸை தெறிக்க விட போகும் ஜீவா

Ajith’s re-release movies: என்னதான் இப்ப வருகிற படங்கள் 500 கோடி 1000 கோடி என வசூலில் சக்க போடு போட்டாலும், பழைய படங்களை அடிச்சுக்கவே முடியாது. என்றைக்குமே மறக்க முடியாத திரை காவியமாக மக்களின் மனதிற்குள் இடம் […]

Ajith’s re-release movies: என்னதான் இப்ப வருகிற படங்கள் 500 கோடி 1000 கோடி என வசூலில் சக்க போடு போட்டாலும், பழைய படங்களை அடிச்சுக்கவே முடியாது. என்றைக்குமே மறக்க முடியாத திரை காவியமாக மக்களின் மனதிற்குள் இடம் பிடித்திருக்கிறது.

அப்படிப்பட்ட படங்களை இப்ப இருக்கிற டெக்னாலஜியை பயன்படுத்தி திரையரங்குகளில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதனால் தான் ஏற்கனவே வெளிவந்து ஹிட் ஆன சில படங்கள் ஒவ்வொன்றாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படி வந்த படங்கள் திரையரங்குகளில் நஷ்டம் ஏற்படாத அளவிற்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

முக்கியமாக மூன்று தினங்களுக்கு முன் வெளிவந்த கில்லி படம் வசூலில் சக்கை போடு போட்டு வெற்றி பெற்று இருக்கிறது. அதே மாதிரி அஜித்தின் சூப்பர் ஹிட் ஆன 3 படங்கள் அவருடைய பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் பண்ணப் போகிறார்கள்.

மே 1ஆம் தேதி சம்பவம் செய்யப்போகும் அஜித்

அதாவது வருகிற மே 1ம் தேதி பில்லா 2, மங்காத்தா மற்றும் ஆசை போன்ற மூன்று படங்களும் மறுபடியும் திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த மூன்று படங்களுமே அஜித் கேரியரில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றி படமாக பெயர் வாங்கியது.

அதிலும் பில்லா 2 மற்றும் மங்காத்தா படத்தில் அஜித்தின் யூகிக்க முடியாத கேரக்டர் மற்றும் நெகட்டிவ் ரோலிலும் நடித்து கைத்தட்டல்களை வாங்கி மாஸ் காட்டி இருப்பார். அத்துடன் இந்த அஜித்தை நாங்கள் எப்பொழுது மறுபடியும் திரையரங்குகளில் பார்ப்போம் என்று ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் ஆக தான் ஆசை படம் வரப்போகிறது.

இந்த ஆசை படத்தில் அஜித்தின் கொள்ளை அழகை கொண்ட புன்னகையை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஜீவா கேரக்டரில் காதல் மற்றும் ரொமான்ஸ் அழகாக தெறிக்க விட்டிருப்பார். அப்படிப்பட்ட இப்படங்களை மறுபடியும் திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள்.

அந்த வகையில் மே 1ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ஒரு தரமான சம்பவம் காத்துக் கொண்டிருக்கிறது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.