Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

உலகமே அழிந்தாலும் இவர்கள் காமெடி மட்டும் அழியாது.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – வடிவேலு!

உலகமே அழிந்தாலும் இவர்கள் காமெடி மட்டும் அழியாது.. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – வடிவேலு!

அறிமுக இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள படம் ‘பேங் பேங்’. இப்படம் வரும் நவம்பர் 26-ஆம் தேதி தியேட்டர்களில் ரீலீசாக உள்ளது.


உலகம் அழிந்த பிறகு,ஜாம்பிக்கள் நிறைந்த விசித்திரமான சூழலில் பிரபுதேவாவும் வடிவேலுவும் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கலந்து சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.இதில் பிரபுதேவா,வடிவேலு மற்றும் அனு கீர்த்தி,யாவி உள்ளிட்ட நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.


சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்றுள்ளது.இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,கடந்த 20ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்த அந்தத் தீவின் எரிமலை,படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் வெடித்துள்ளது.இந்தச் சம்பவத்தையும் படக்குழுவினர் தத்ரூபமாகப் படமாக்கியுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் 16அன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிரபுதேவாவின் நடனம் மற்றும் யுவனின் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


மேலும்,பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடனமாடிய ‘ஸோம்பி நடனம்’ என்ற ப்ரோமோ பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.விரைவில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர்களின் பழைய காமெடி கெமிஸ்ட்ரி,பிரபுதேவாவின் அதிரடி நடனம் மற்றும் வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் என அனைத்தும் இணைந்து தியேட்டர்களில் சிரிப்பு வெடியைக் கிளப்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.