பிரபலமான பல உச்ச நட்சத்திரங்கள் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருப்பார்கள். MGR, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என நெகடிவ் கேரக்டர் பண்ணாத நடிகர்களே இல்லை. ஆனால் ஒரே ஒரு நடிகர் மட்டும் தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் ஒருமுறை கூட வில்லன் கேரக்டர் பண்ணவில்லை.
80ஸ், 90ஸ் நடிகர்கள் பலர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் குணச்சித்திர கதாபாத்திரங்களோடு, வில்லன் கேரக்டர்களில் கூட நடிக்கிறார்கள். ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் பார்த்திபன் கூட வில்லன் கேரக்டரில் நடித்து விட்டார்கள். ஆனால் இவர் மட்டும் இன்னும் அந்த பக்கம் போகவே இல்லை.
Also Read: டீ டோட்டலராக வாழ்ந்து மறைந்த 3 வில்லன்கள்.. அதிலும் உத்தமனாகவே வாழ்ந்த முரடன்
மேலும் இவர் தன்னுடைய திரைப்படங்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது , கற்பழிப்பு காட்சிகளில் கூட அதிகமாக நடித்திருக்க மாட்டார். அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்தாலும் ஏனோ இவர் முகத்திற்கு செட் ஆகவில்லை.
இளைய திலகம் பிரபு இதுவரை தன்னுடைய எந்த படங்களிலும் வில்லனாக நடித்ததில்லை. இதற்கு காரணம் ‘சின்ன தம்பி’ திரைப்படத்தில் இருக்கும் அதே குழந்தை முகம் இன்னும் அவருக்கு மாறாமல் இருப்பது தான். அவரை நெகடிவ் ரோலில் இயக்குநர்களாலும் சரி, ரசிகர்களாலும் சரி ஏற்றுக்கொள்ள முடியாது.
அஞ்சலி திரைப்படத்தில் ஒரு 2,3 காட்சிகளில் முரட்டுத்தனமாகவும், குடிகாரனாகவும் காட்டியிருப்பார்கள். அதில் கூட இறுதி காட்சிகளில் பிரபுவை நல்லவராக தான் முடிப்பார்கள். அக்னி நட்சத்திரத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவருடைய குழந்தை முகம் மாறாமல் தான் இருக்கும்.
பிரபு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் கூட நெகடிவ் ரோலில் நடிக்கவில்லை. பல மொழிகளில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார்.
Also Read: கமல்ஹாசனுடன் இதுவரை இணையாத ஒரே வில்லன் நடிகர்.. மிரட்டியும் கிடைக்காத வாய்ப்பு