புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லிப் லாக் காட்சியா தெறித்து ஓடும் 4 ஹீரோக்கள்.. ஏழடியில் இருப்பதால் செட்டே ஆகாத சிபிராஜ்

Tamil Movie Actors: சினிமாவில் இருக்கும் நடிகர்கள் இதில் நடிக்க மாட்டேன், அதில் நடிக்க மாட்டேன் என சொல்லக்கூடாது. அப்படி இருந்தும் நான்கு ஹீரோஸ் லிப் லாக் காட்சியில் மட்டும் நடிக்க முடியாது என தெறிந்து ஓடியிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன்: சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்து இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருக்கக்கூடிய இவர், சினிமாவில் நடிகைகளுடன் கண்ணியமாக நடிக்கக்கூடிய நடிகர்களுள் ஒருவர். இவர் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த ரெமோ படத்தில் இருவருக்கும் இருந்த லிப்லாக் காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார்.

Also Read: இசை புயல், இசைஞானி எனப் புகழப்பட்ட இசையமைப்பாளர்.. சொந்த வாழ்க்கையால் திசை மாறிய கொடுமை

உதயநிதி ஸ்டாலின்: அரசியல் குடும்பத்தை சேர்ந்த இவர் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்துவிட்டு இப்போது முழு அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். இவர் கலகத் தலைவர் படத்தில் கதாநாயகனாக நடித்த போது நிதி அகர்வாலுடன் ஒரு லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டியதாக இருந்தது. அதில் நடித்தால் ஏகப்பட்ட கிசுகிசுப்பில் மாட்டிக் கொள்வோம் எதுக்குடா வம்பு என்று, அதில் நடிக்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

விஜய் சேதுபதி: கோலிவுட்டில் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிக்க தயார் என பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் திரிஷாவுடன் 96 என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். இதில் கடைசி வரை இவர்கள் சேர மாட்டார்கள். ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் ஒரு லிப் லாக் காட்சியை அந்த படத்தில் இயக்குனர் வைத்திருந்தார். ஆனால் அந்தக் கதைக்கு நல்லா இருக்காது வேண்டான்னு இவரை சொல்லிவிட்டாராம்.

Also Read: 60 வருடத்திற்கு முன்பே எம்ஜிஆர் நடித்த ஏலியன் படம்.. சங்கர் கூட கை வைக்க பயப்பட்ட அயலான் பட கதை, பட்ஜெட்

சிபிராஜ்: கோயம்புத்தூர் குசும்புக்கார பேச்சால் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர் சத்யராஜின் மகன் தான் சிபிராஜ். இவரால் அவருடைய தந்தை அளவுக்கு சினிமாவில் வளர முடியவில்லை. இருப்பினும் தரமான கதை களத்தை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த சத்யா என்ற படத்தில் கதாநாயகியான ரம்யா நம்பீசன் கூட லிப் லாக் காட்சியில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதற்கு காரணம் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அவர்கள் இந்தக் காட்சியை பார்த்தால் திட்டுவார்கள் என்று மறுத்துவிட்டார். ஆனால் உண்மையில் ஏழடி உயரத்தில் இருக்கும் சிபிராஜ், லிப்லாக் காட்சி அவருக்கு செட் ஆகாது என்பதால் தான் வேணாம்னு தெறித்து ஓடிவிட்டார்.

Also Read: இமேஜ் பார்க்காமல், லேடி கெட்டப் போட்டு ஹிட்டான 5 படங்கள்.. ஷில்பாவை யாராலும் மிஞ்ச முடியாது

Trending News