ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்தியன் 2-வில் நடித்து ரிலீசுக்கு முன்னரே மரணித்த 4 பிரபலங்கள்.. உயிர் பயத்தை காட்டிய கெட்ட நேரம்

Indian 2: முதல் கோணல் முற்றிலும் கோணல் என பொதுவாக ஒரு பழமொழி சொல்லுவது உண்டு. இதற்கு அர்த்தம் நாம் முதலில் ஆரம்பிக்கும் காரியம் ஏதாவது ஒன்று தவறாகவோ அல்லது நெகட்டிவ் ஆகவோ நடந்துவிட்டால் அது முழுக்கவே அப்படித்தான் இருக்கும் என்பதுதான். இந்த பழமொழி இப்போது இந்தியன் 2 படத்திற்கு தான் கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பார்த்த திரைப்படம் தான் இந்தியன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. 60% கண்டுபிடிப்புகள் முடிந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடந்த கோர விபத்தால் டெக்னீசியன்ஸ்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர் இந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே நான்கு பெரிய ஜாம்பவான்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

Also Read:அடுத்த குணசேகரனை பற்றி சீக்ரெட்டை உடைக்கும் சாமியார்.. மருமகள்களை தும்சம் செய்ய வரும் மாமனார்

விவேக்: தமிழ் சினிமா ரசிகர்களால் சின்ன கலைவாணர் என கொண்டாடப்பட்டவர் தான் விவேக். காமெடியான வசனங்களின் மூலமே சமூக கருத்துகளை அசால்ட்டாக சொல்லியவர். இவர் கொரோனா காலகட்டத்தின் போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தானே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆனால் அடுத்த நாளே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மனோபாலா: தமிழ் சினிமாவில் இயக்குனராக ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த மனோபாலா. அதன்பின்னர் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பல நூறு படங்களில் நடித்தவர். இளம் ஹீரோக்களுடன் கூட இணைந்து நடிக்கும் அளவுக்கு தன்னுடைய எண்ணங்களை இளமையாக வைத்துக் கொண்ட இவர் எதிர்பாராத விதமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Also Read:VFX ஆல் தள்ளிப்போகும் 3 படங்களின் ரிலீஸ்.. 2024 பொங்கல் பண்டிகையையும் தவறவிட்ட இந்தியன் 2

நெடுமுடி வேணு: மலையாள சினிமா உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நெடுமுடி வேணு. இவர் ஒரு நாடக கலைஞர் ஆவார். தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பல தேசிய விருதுகளையும். மாநில விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவரும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தவர்தான். கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய 73 வது வயதில் உயிரிழந்தார்.

மாரிமுத்து: மாரிமுத்து இறந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்றுவரை தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் தங்கள் வீட்டில் நடந்த இழப்பு போல் கண்ணீர் விட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ஆதி குணசேகரன் என்னும் கேரக்டரில் மனதில் பதிந்த இவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். மாரிமுத்துவும் இந்தியன் 2 படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:கமல் படத்திற்கு வந்த தடை.. சதியை உடைத்து மண்டியிட வைத்த உலகநாயகன்

Trending News