திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலிவுட் மோகத்தில் லாபம் பார்க்க துடிக்கும் 4 நடிகர்கள்.. சுதா கொங்காரா வைத்து வலை விரிக்கும் சூர்யா

Four Actors Interested Bollywood Movie: பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் பேரும் புகழையும் சம்பாதிப்பதற்கு அஸ்திவாரத்தை தொடங்குவது தமிழ் படங்களின் மூலம். ஆனால் அதன்பின் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து அவர்கள் மற்ற மொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தி அங்கே பிஸியாக நடிக்க போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது தமிழில் எந்த அளவுக்கு ஒரு படத்தின் மூலம் வெற்றியை பார்க்கிறார்களோ, அதே போல பாலிவுட்டிலும் நடித்து ரசிகர்களை சம்பாதித்து அதன் மூலம் லாபத்தை பார்க்க துடியாக துடித்து வருகிறார்கள்.

Also read: கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு.. பணத்தாசையால் அதல பாதாளத்திற்கு சென்ற தனுஷ் பட ஹீரோயின்

அதில் தனுஷ் தற்போது மிக வேகமாக படையெடுத்து போகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு செல்லுபடியாகவில்லை. ஆனால் தெலுங்கில் இவரை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு படம் அமோக வரவேற்பை பெற்றது.

அதன் காரணமாகவே பாலிவுட் பக்கமும் சென்றால் நம்முடைய இமேஜ் தாறுமாறாக உயரும் என்ற எண்ணத்தில் தற்போது “தேரே இஸ்க் மேன்” என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இதற்கடுத்து இவர் என்ன பண்ணாலும் அதையே நான் பண்ணுவேன் என்று சிவகார்த்திகேயன் ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.

Also read: வசூல் வேட்டையாடும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் 2-ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

அதனால் பாலிவுட்டையும் விட்டு வைப்பாரா என்ன, அங்கேயும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். எப்படியாவது தனுஷ்க்கு போட்டியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் இறங்கி உள்ளார்.

அடுத்ததாக சுதா கொங்காரா ஹிந்தியில் சூரரை போற்று படத்தை ரீமேக் பண்ணுகிறார். இதில் கேமியோ தோற்றத்தில் நடிக்க இருக்கும் சூர்யா, இந்த வாய்ப்பை வைத்து பாலிவுட்டில் இவருடைய முத்திரையை பதித்து விடலாம் என்று தவமாக காத்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து விஜய் சேதுபதி ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து இன்னும் பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் சுற்றி வருகிறார்.

Also read: சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

Trending News