திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யின் தொடர்பை துண்டிக்கும் 4 நடிகர்கள்.. மேலிடத்தை பகைச்சிக்க விரும்பாமல் பம்மும் ஹீரோக்கள்

4 Actors Cut Vijay’s Connection: விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் 2026 தேர்தலை டார்கெட் வைத்து காய் நகர்த்தி வருகிறார். அதனாலயே தற்போது உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் அவர் 2 கோடி நபர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் அப்படி என்னதான் செய்து விடுவார் பார்க்கலாம் என்ற ஆர்வமும் மக்களுக்கு இருக்கிறது. புது மாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இல்லை என இளைய சமுதாயமும் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு சென்றதால் அவரை விட்டு நாசுக்காக ஒதுங்கி போகும் நடிகர்களும் இருக்கின்றனர். அதில் ஜெயம் ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே தன் மனதில் இருப்பதை காட்டியிருந்தார். அதில் பத்திரிக்கையாளர்கள் தளபதியின் அரசியலுக்கு ஆதரவு தருவீர்களா? என கேள்வி எழுப்பினர்.

Also read: திரிஷா மேட்டரில் கப்பு சிப்புன்னு வாயை மூடி கொண்ட ரெண்டு பெரும் தலைகள்.. அதுக்குன்னு போன சுவிட்ச் ஆப் பண்ணுவீங்க!

அதற்கு அவர் அண்ணன் வீட்டுக்கு கூப்பிட்டால் போகலாம் மற்றபடி ஒன்றுமில்லை. என்னுடைய வட்டம் சினிமா மட்டும்தான் என கூறியிருந்தார். இதிலிருந்து அவர் நமக்கு எதுக்கு வம்பு என ஒதுங்கி போவது வெளிப்படையாக தெரிகிறது. அதேபோல் நடிகர் விக்ரமும் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துக்கள் நண்பா என ட்வீட் போட்டிருந்தார்.

ஆனால் உண்மையில் இது ஒரு ஃபார்மாலிட்டிக்காக தான். ஏனென்றால் விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் அவருடைய இடத்திற்கு கடும் போட்டி நடந்து வருகிறது. அந்த ரேசில் விக்ரமும் இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தன் மகளை கலைஞரின் பேரனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

அப்படி இருக்கும் போது இவருடைய ஆதரவு நிச்சயம் விஜய்க்கு கிடைக்காது. அடுத்ததாக சத்யராஜ் விஜய்யுடன் அதிக படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அதனாலேயே அவர் தளபதியின் அரசியல் நகர்வை பாராட்டி பேசி இருக்கிறார். இருப்பினும் கட்சியில் சேருவதோ ஆதரவு கொடுப்பதோ நடக்காத விஷயம்.

Also read: GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சி இவங்க தான்.. வெங்கட் பிரபு வலை வீசி கண்டுபிடித்த நடிகை

மேலும் கமல் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார். அதேபோல் அவரை அரசியலுக்கு அழைத்தது நான்தான் என்றும் கூறியிருந்தார். ஆனால் கூட்டணி என்று வரும்போது அவர் திமுக பக்கம் தான் நிற்பார் என்பது சமீப கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

Trending News