புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடிப்பில் கமலை மிரட்டிய 4 நடிகைகள்.. இது வாரித் தின்னுவிடும்ன்னு பாரதிராஜாவிடம் சர்டிபிகேட் கொடுத்த உலக நாயகன்

Kamalhassan: சினிமாவைப் பொறுத்தவரை உலக நாயகனின் நடிப்பை மிஞ்சுவதற்கு இன்னொருத்தர் பிறந்து தான் வரணும் என்று சொல்வதற்கு ஏற்ப நடிப்பின் நாயகனாக திகழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் மற்றவர்களிடமிருந்து நடிப்பை எந்த அளவிற்கு எதிர்பார்ப்பார் என்பது யோசிக்க முடியாத வகையில் இருக்கும்.

ஆனால் இவர், சில நடிகைகளின் நடிப்பை மிரண்டு போய் பார்த்திருக்கிறார். அந்த அளவிற்கு கமலை நடிப்பில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள் நான்கு நடிகைகள். அதில் ஒரு நடிகை பற்றி சொல்ல வேண்டும் என்றால் வளவளன்னு பேசிக்கொண்டே, துருதுருவென்று நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்த நடிகை ஊர்வசி தான்.

Also read: அபூர்வ சகோதரர்கள், பாலா பட நடிகர் அகால மரணம்.. யாரும் உதவாததால் ரோட்டில் இறந்து கிடந்த பரிதாபம்

இவர் கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், அந்த ஒரு நிமிடம் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இவருடைய நடிப்பு, கமலை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு இருந்திருக்கிறது. இதனால் பலமுறை கமல் இவரை பாராட்டு மழை பொழிந்து இருக்கிறார். அடுத்ததாக நடிகை சரிதா, இவர் கமலுடன் மாரோ சரித்ரா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

அப்பொழுது சரிதா, மனதில் பட்டதை உடனடியாக யார் என்று கூட பார்க்காமல் கேட்டு விட்டு விடுவாராம். எந்தவித பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எல்லாத்தையும் வாயடைக்க வைக்கும் அளவிற்கு தைரியசாலி என்று கமலிடம் பாராட்டுகளை பெற்று இருக்கிறார். இதற்கு அடுத்ததாக நடிகை வடிவுக்கரசி கிட்டத்தட்ட 350 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அதில் கமலுடன் சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.

Also read: காமெடியில் அசத்திய கமலின் 5 படங்கள்.. பட்டித் தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய சண்முகி

அப்பொழுது இவருடைய நடிப்பை கண்டு கமல் அப்படியே ஆடிப் போய்விட்டாராம். அத்துடன் இந்த பொண்ணு பிற்காலத்தில் எல்லாத்தையும் வாரி தின்னுவிடும் என்று பாரதிராஜாவிடம் சொல்லி இவருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்து கமல், நடிப்பை பார்த்து மிரண்டு போன நடிகை யார் என்றால் ஜோதிகா.

இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தெனாலிராமன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள். அப்பொழுது ஜோதிகாவின் டெடிகேஷன் ஆன நடிப்பும், நேர்மையான கேரக்டரையும் பார்த்து இந்தப் பொண்ணு சினிமாவில் கொடி கட்டி பேரையும், புகழையும் சம்பாதித்து விடுவார். அத்துடன் எங்க போனாலும் நடிப்பை வைத்துக்கொண்டு முன்னேறிடுவார் என்று இவரைப் பற்றி பெருமையாக அங்கு இருப்பவர்களிடம் கூறியிருக்கிறார்.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட 3 டாப் நடிகர்கள்.. கமல், ரஜினிக்கு டஃப் கொடுத்த ஹீரோ

Trending News