புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நடிப்பில் கமலையே மிரள விட்ட 4 நடிகைகள்.. ஒரு படத்துக்கே உயிர் கொடுத்த அன்னலட்சுமி

Kamalhaasan: நடிகர் கமலஹாசனுடன் நடிப்பது என்றால் எப்பேர்ப்பட்ட கலைஞர்களுக்கும் உதறல் எடுத்து விடும் என சினிமா வட்டாரங்களில் சொல்வதுண்டு. அதற்கு முக்கிய காரணம் கமல் ஒரு சீனில் இருந்தால், ரசிகர்களால் மற்ற யாரையுமே பார்க்க முடியாத அளவுக்கு ஸ்கோர் செய்துவிடுவார். அப்படிப்பட்ட கமலையே இந்த நான்கு நடிகைகள் நடிப்பில் மிரள விட்டு பார்த்திருக்கிறார்கள்.

ஆண்டவரை மிரள விட்ட நடிப்பு அரக்கிகள்

ஊர்வசி: நடிகை ஊர்வசியை பொம்பள கமல் என்று கூட சொல்வது உண்டு. 13 வயதில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த ஊர்வசி மைக்கேல் மதன காமராஜன் என்னும் படத்தில் கமலுடன் நடித்து சக்கை போடு போட்டிருப்பார். அந்த படத்தில் கமல் மற்றும் ஊர்வசியின் காம்போவில் வரும் காட்சிகள் பட்டையை கிளப்பி இருக்கும்.

அதன் பின்னர் கமல் தயாரித்த மகளிர் மட்டும் படத்திலும் ஊர்வசி ஜானகி என்னும் கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதைத் தொடர்ந்து கமல் தன்னுடைய நிறைய படங்களில் ஊர்வசிக்கு வாய்ப்பு கொடுத்தார். கமல் மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படத்திலும் ஊர்வசியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

Also Read:மன உளைச்சலை ஏற்படுத்தும் பிக்பாஸ் 7.. கமலுக்கு எதிராக பாயும் தகவல் அறியும் உரிமை சட்டம்

அபிராமி: கமலஹாசன் தன்னுடைய படங்களின் மூலம் நிறைய சோதனைகளை மேற்கொள்ளுவார். அப்படி அவர் எடுத்த படம் தான் விருமாண்டி. இந்த படத்தில் அன்னலட்சுமி என்னும் கேரக்டரில் அபிராமி நடித்திருப்பார். ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்ணாக அந்த படத்தில் மிரட்டி இருப்பார். உண்மையை சொல்ல போனால் விருமாண்டி படத்தின் அன்னலட்சுமி கேரக்டரில் அபிராமியை தவிர வேறு யாரு நடித்து இருந்தாலும் செட் ஆகியிருக்காது.

கோவை சரளா: உலகநாயகன் கமலஹாசனுக்கு, கோவை சரளா ஜோடியா என்பதை அப்போது தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் யாராலையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தின் இயக்குனர் பாலு மகேந்திரா கூட கோவை சரளா நடிப்பதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கமல் இந்த கேரக்டரில் சரளாதான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து நடிக்க வைத்தார். 28 வருடங்கள் ஆகியும் சக்திவேல் கவுண்டர் மற்றும் பழனி காம்போவை இன்றுவரை ரசிக்க முடிகிறது.

சுகன்யா: 90களின் காலகட்டத்தில் இருந்த முக்கியமான நடிகைகளில் ஒருவர் சுகன்யா. இவர் கமலஹாசன் உடன் இணைந்து மகாநதி படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்தியன் படத்தில் பிராஸ்தடிக் மேக்கப் போட்டு எழுவது வயது முதியவராக கமல் மிரட்டி இருப்பார். அவருக்கு இணையாக அதே மேக்கப்புடன் நடித்து சுகன்யா பட்டையை கிளப்பி இருந்தார்.

Also Read:கமலுக்கு வலது கையாக மாறிப்போன நடிகரின் மனைவி.. கௌதமி விட்டு போன மொத்த கண்ட்ரோலும் இவங்க கிட்ட தான்

Trending News