ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அசைவ கறிக்கு அடிமையான 4 அக்ரஹார நடிகர்கள்.. எம்ஜிஆரை விட ஒரு படி மேலே போய் பொளந்து கட்டிய கமல்

4 Actors Non Veg Foodie: பொதுவாக சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் சாப்பிடும் பழக்கவழக்கங்களில் கண்ட்ரோலாக இருந்து அவர்களுடைய உடல் தோற்றத்தை பாதுகாத்து வருவார்கள். அப்படி இருக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் சிலர் என்ன ஆனாலும் பரவாயில்லை சாப்பாடு விசயத்தில் நான் இப்படித்தான் என்று ஒரு புடி புடித்து சாப்பிட்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பிராமினாக இருந்தாலும் பரவாயில்லை என்று அசைவ சாப்பாட்டிற்கு அடிமையாய் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

அந்த காலத்தில் எம்ஜிஆரை மட்டும்தான் சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்களாம். ஆனால் அவரை விட கமல் ஒரு படி மேலே போயிருக்கிறார்.  அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த கமலுக்கு சிறுவயதிலேயே அசைவ சாப்பாட்டின் மீது பிரியம் வந்திருக்கிறது. அப்பொழுது வீட்டில் இவருக்கு தனியாக ஒரு கிச்சனை ஏற்பாடு பண்ணி, அதுக்கு என்று சமையல்காரரை வைத்து நான்வெஜ் சாப்பாட்டை கொடுத்திருக்கிறார்கள்.

அப்படி அவர் அதிகமாக அடிமையான நான்வெஜ் சாப்பாடு எதுவென்றால் லெக் பீஸ் ஓட சிக்கன் பிரியாணி, இறால் மற்றும் எல்லா வகையான மீன் அவருக்கு ரொம்பவே பிடிக்குமாம். அதுவும் மீன் சாப்பாடு என்றால் நேரம் காலம் கூட பார்க்காமல் நைட்டு எத்தனை மணி ஆனாலும் வெளுத்து வாங்கிட்டு தான் தூங்கவே போவாராம். அந்த அளவிற்கு நான்வெஜ் சாப்பாடு மீது அடிமையாக இருந்திருக்கிறார்.

Also read: எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் கமல்- மணிரத்தினம்.. அந்த படத்தின் காபி தான் Thug Life?.

அடுத்ததாக அஜித் இவர் பாதி பிராமின் பாதி அசைவம். அதாவது இவருடைய அம்மா அப்பா கலப்பு திருமணம் செய்திருக்கிறார்கள். ஆனால் இவர் சிறுவயதில் வளரும் பொழுது பிராமினாகத் தான் வளர்ந்து இருக்கிறார். அதன் பின் சாப்பாடு மீது ஆர்வம் காட்டி பிரியாணியில் ஒரு சரித்திரம் படைக்கும் அளவிற்கு தானாகவே செய்து சாப்பாட்டை ருசி பார்த்து இருக்கிறார்.

அதனாலையே நான்வெஜ் சாப்பிடாமல் இவருக்கு தூக்கமே வராதாம் அந்த அளவிற்கு இருந்திருக்கிறார். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் இவர் பிராமினாக இருந்தாலும் பிரியாணி என்று வந்துவிட்டால் எதையுமே யோசிக்காமல் இவருடைய மனசு தானாகவே மட்டன் பிரியாணிக்குள் போய்விடுமாம்.

அடுத்ததாக ஒய் ஜி மகேந்திரன் இவர் என்னதான் அக்ரஹாரமாக இருந்தாலும் ஆல்கஹால் சாப்பிடும்போது நான்வெஜ் இல்லாமல் இருக்க மாட்டார். அதுவும் லிவர் ஃப்ரை கண்டிப்பாக இவருக்கு இருக்க வேண்டும். எதற்கு என்றால் லிவர் ஃப்ரை சாப்பிட்டால் மனிதனுடைய லிவருக்கு ரொம்பவே பாதுகாப்பானது என்று நம்பிக்கை வைத்திருக்கிறார். அதனாலேயே இதை விரும்பி அடிக்கடி சாப்பிட்டுக் கொள்வாராம்.

Also read: என்ன கேப்டனா, வேல செய்ய விடமாட்றாங்க, கதறும் மாயா.. நாரதர் வேலையை பார்த்த பிக்பாஸ்

Trending News