வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Upcoming 4 New Serials: விஜய் டிவியை ஓரங்கட்ட சன் டிவி களம் இறக்கும் 4 புது சீரியல்.. நந்தினி சீரியல் போல் படையெடுத்து வரும் திகில் தொடர்

Upcoming 4 New Serials: சன் டிவியுடன் மற்ற எந்த சேனல் போட்டி போட்டாலும் டிஆர்பி கிட்ட நெருங்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஒய்யாரத்தில் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் சன் டிவி சீரியல் ரொம்பவே போர் அடிக்குது என்று மக்கள் விஜய் டிவி பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இதை உடனே சரி செய்ய வேண்டும் என்று விஜய் டிவியை மொத்தமாக ஓரங்கட்ட சன் டிவி இப்போது 4 புத்தம் புது சீரியல்களை களம் இறக்க தயாராகிவிட்டது. அதுவும் மக்களுக்கு எந்த மாதிரியான சீரியல்கள் கொடுத்தால் அவர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்று தெரிந்து அதை நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.

90ஸ் கிட்ஸ்க்கு எப்போதுமே மறக்க முடியாத பல சீரியல்கள் இருந்தாலும் திகில் தொடர், மகாபாரதம், அனுமான், விநாயகர் போன்ற சீரியல் மீது அதீத விருப்பம் உண்டு. அந்த வகையில் அதை இப்பொழுது பூர்த்தி செய்யும் வகையில் அந்த மாதிரியான கதைகளை வைத்து மறுபடியும் உள்ளே நுழைகிறார்கள். அப்படி எந்த சீரியல்கள் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.

நந்தினி சீரியல் போல் திகில் தொடர்

ராமாயணம்: எத்தனை முறை இராமாயணம், இதிகாசம் தொடரை பார்த்தாலும் சலிக்கவே செய்யாது என்று சொல்வது போல் ஒவ்வொரு முறையும் பார்ப்பதற்கு புதிதாக தோன்றும். அந்த வகையில் இதற்கான பிரமோ வெளியாகி மக்களை ஆரவாரப்படுத்தி விட்டது. அத்துடன் இதை தினமும் ஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் கமெண்ட்ஸ் மூலம் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் எப்பொழுதுமே இந்த மாதிரியான சீரியல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஒளிபரப்பு செய்வார்கள். அந்த வகையில் கூடிய விரைவில் இதற்கான தேதி மற்றும் நேரத்தை வெளியிடுவார்கள்.

அனாமிகா: சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த நந்தினி சீரியலை மறக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஒரு திகில் தொடராக அனைவரையும் மிரள வைத்து விட்டது. திகில் தொடராக இருந்தாலும் அதில் காதல், ரொமான்ஸ் மூலம் மக்களை கவர் கூடிய அனைத்து விஷயங்களையும் பார்க்க முடிந்தது. தற்போது அதே மாதிரி திகில் தொடராக அனாமிகா சீரியல் ஒளிபரப்பாக போகிறது.

இதில் ஒரு ஹீரோயின் மீது ஆசைப்படும் இரண்டு ஹீரோக்களை வைத்து த்ரில்லர் தொடராக கதை நகர போகிறது. இரண்டு ஹீரோக்கள் யார் என்றால் தற்போது சிங்க பெண்ணே சீரியலில் நடித்து வரும் மகேஷ் மற்றும் விஜய் டிவி சேனலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கதிர் நடித்துள்ளார்கள். அந்த வகையில் இந்த நாடகம் வானத்தைப்போல சீரியலுக்கு பதிலாக இரவு 8.30க்கு ஒளிபரப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மருமகள்: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துட்டு வந்த கேப்ரியெல்லா அனைவருக்கும் பரிச்சயமானவர். இதனை தொடர்ந்து ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடித்து பிரபலமாகினார். தற்பொழுது சன் டிவியில் முதன்முறையாக நுழைந்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நந்தினி சீரியலில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி கமிட் ஆகியிருக்கிறார். அந்த வகையில் இந்த நாடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

புன்னகை பூவே: இந்த நாடகத்தின் புரோமோவை பார்க்கும் பொழுது வானத்தைப்போல படம் தான் ஞாபகம் வருகிறது. அதாவது சின்ன வயதில் நண்பன் குடும்பம் கஷ்டப்படும் பொழுது பணத்தை கொடுத்து பெரிய ஆளாக்கினார். ஆனால் அவர்கள் வளர்ந்து நிற்கும் பொழுது அந்தஸ்து என்று சொல்லி கை கொடுத்து தூக்கி விட்ட குடும்பத்தை நிராகரிப்பது போல் கதை இருக்கிறது. அதிலும் சின்ன வயதில் இருந்து கட்டிக்க போறவரை நினைத்து உருகும் ஒரு பெண்ணின் எதார்த்தமான காதலை முன் வைக்கும் விதமாக புன்னகை பூவே சீரியல் மதியம் 1மணிக்கு ஒளிபரப்பாக போகிறது.

Trending News