வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2023ல் பெரும் துயரை தந்த நான்கு பேரின் மரணம்.. அதிகாலையில் பதற வைத்த கேப்டனின் மறைவு செய்தி

4 celebrities died unexpectedly in 2023: இந்த வருடம் நல்லபடியாக முடிந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், அடுத்தடுத்து நான்கு பிரபலங்களின் மறைவு ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியது. அதிலும் இன்று அதிகாலையில் வெளியான விஜயகாந்த் மரண செய்தி நெஞ்சை பதற வைத்தது, என்றாலும் ‘ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டவர்கள் மீண்டு வருவதில்லை’ என்பது தானே உண்மை.

மயில்சாமி: நகைச்சுவை நடிகராகவே நமக்கெல்லாம் பரிச்சயமான மயில்சாமி, திரையுலகில் மேடை நாடகங்கள், மிமிக்ரி, காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என பல பரிமாணங்களில் மக்களை சிரிக்க வைத்து மகிழ்வித்தவர். ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மயில்சாமி, கொரோனா காலகட்டத்தில் நிஜ ஹீரோவாகவே தெரிந்தார். ஏனென்றால் அந்த அளவிற்கு கொரோனா காலத்தில் மக்களுக்கு வேண்டிய உதவிகளை வீடு வீடாக சென்று, என்ன வேண்டும் என்பதை கேட்டு உதவி செய்தார்.

அதுமட்டுமல்ல ஏழைக் குழந்தைகள் கல்வி செலவுக்கு பணம் வழங்கும் பழக்கம் கொண்டவர். எளிமையாக யாருடனும் பழகக்கூடியவராகவே இருந்தார். சமீபத்தில் சென்னையில் புயல் வெள்ளம் வந்தபோது கூட சாலிகிராம மக்களின் கண்கள் இவரை தான் தேடியது. இந்த வருட பிப்ரவரி மாதத்தில் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்த மயில்சாமியின் மறைவு, இன்று வரை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை.

மனோபாலா: 69 வயதான மனோபாலா இப்போது இருக்கும் இளம் நடிகர்களுடன் சேர்ந்து ஈடு கொடுத்து நடித்து காமெடியில் கலக்கியவர். இந்த வருட மே மாதத்தில் கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா, திடீரென்று மரணம் அடைந்தது திரை உலக பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவருடன் பயணித்த பலரும் கண்ணீர் வடித்தனர்.

நடிகராக மட்டுமல்லாமல் இவர் ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி நடித்துக் கொண்டிருந்த மனோபாலா, நிஜ வாழ்க்கையில் எளிமையான மனிதர். அனைவராலும் அவரை எளிதாக அணுக முடிந்தது.

Also Read: சாவே இல்லாத சத்திரியன் போலீசாய் மிரட்டிய 5 படங்கள்.. கேப்டனுக்கு கனகச்சிதமாய் பொருந்திய காக்கிசட்டை

2023 எதிர்பாராத வகையில் மரணமடைந்த 4 பிரபலங்கள்

மாரிமுத்து: இயக்குனராக இருந்த போது கூட பேமஸ் ஆகாத மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரீட்சையமானார். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் கச்சிதமாக நடித்ததுடன் மதுரை பேச்சு வழக்கில் ‘ஏம்மா ஏய்’ என்ற டயலாக் அவருடைய ஐடென்டியானது. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகி தந்தையாகவும், ஜெயிலர் படத்தில் சிலை கடத்தலுக்கு உதவுவதாக நடித்து அசத்தினார்.

30 வருடம் திரையுலகில் இருந்த மாரிமுத்து, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். அதுக்குள்ள யாரு கண்ணு பட்டு போச்சோ! திடீரென்று மாரடைப்பால் இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் காலமானார். இவருடைய மரணம் சின்னத்திரை ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியது.

கேப்டன் விஜயகாந்த்: இன்று அதிகாலையில் வெளியான கேப்டன் விஜயகாந்த்தின் மரண செய்தி நெஞ்சை பதைபதைக்க வைத்தது. நடிகராக மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த மனிதநேய தலைவராக இருந்த விஜயகாந்த், அரசியலிலும் தனி ஆதிக்கம் செலுத்தினார். தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளின் மத்தியில் முதன்முதலாக விஜயகாந்தின் தேமுதிக கட்சி தான் எதிர்க்கட்சியானது.

எம்ஜிஆருக்கு பிறகு ரசிகர்கள் ரொம்பவே விஜயகாந்தை தான் நம்பினார்கள். அவருடைய உடல் நலம் மட்டும் ஒத்துழைத்திருந்தால் இன்னும் கட்சியை பலப்படுத்தி இருப்பார். அவருடைய மரணத்தை தாங்க முடியாத ரசிகர்களும் தொண்டர்களும் இன்று மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Also Read: விஜயகாந்த் வளர்த்து விட்ட 6 நடிகர்கள்..குடை பிடிக்க வந்து கொடூரமாக தாக்கிய மாமன்னன்!

Trending News