சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஜீவானந்தத்தை புரிந்து கொண்ட 4 மருமகள்கள்.. புருஷனை தூக்கி எறிய தயாரான ஈஸ்வரி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் 60 வயது கிழவி முதல் இப்ப இருக்கிற பெண்கள் முதற்கொண்டு அனுபவித்து வரும் நிலைமையை எடுத்து சொல்கிறது. அந்த வகையில் அடுப்பங்கரையில் வேலைக்காரி போல் இருந்து வந்த மருமகள்கள், குணசேகரனிடம் இருந்து தப்பித்து தற்போது சொந்தக்காலில் ஜெயிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துடன் குணசேகரன் மாதிரி ஆட்களுக்கு நல்ல பாடத்தை புகுத்த வேண்டும் என்ற முடிவில் இறங்கி விட்டார்கள். இவர்களுக்கு உறுதுணையாக அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் இருக்கிறார்கள். மேலும் அப்பத்தாவை பார்த்து பேசினால் நமக்கு தெளிவான ஒரு பதில் கிடைக்கும் என்று அவரை சந்திப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

அதற்கு தகுந்தார் போல் நந்தினி மற்றும் ரேணுகா வீட்டில் இருக்கும் புருஷன்களை டார் டாராக கிழித்து தொங்க விடும் அளவிற்கு களத்தில் இறங்கி விட்டார்கள். இதற்கிடையில் குணசேகரன் அப்பத்தாவின் சொத்தை மீட்டெடுக்க முடியவில்லை. ஆதனால் பெண்களிடம் தஞ்சம் அடைந்து அவ்வப்போது அப்பத்தாவிடம் பேசி சொத்தை எழுதிட்டு வாங்க என்று கொஞ்சம் கூட வாய் கூசாமல் சொல்லி வருகிறார்.

ஆனால் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் இவருக்கு எதிராக இறங்கி விட்டார்கள் என்று தெரிந்தும் வேற வழி இல்லாமல் அவர்களை அண்டி பிழைத்து வருகிறார் குணசேகரன். பின்பு குணசேகரன் அப்பத்தாவிடம் பேசிட்டு வாங்க என்று அனுப்பி விடுகிறார். இதுதான் சான்ஸ் என்ற அவர்கள் வெளியில் வந்து விடுகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்த நான்கு மருமகளும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்கு கிளம்பி விட்டார்கள்.

Also read: ரகசியமாக எக்ஸ் காதலனை சந்திக்கும் ஈஸ்வரி.. புருசனை டார் டாராக கிழித்து தொங்கவிட்டு நந்தினி

இதனை அடுத்து இந்த 4 மருமகளும் ஒன்றாக பேசி முடிவெடுக்கிறார்கள். அதாவது இவர்கள் கட்டிட்டு வந்த புருஷன்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் என்றும், இதற்கு பலிகாடாக ஜீவானந்தத்தின் மனைவி உயிர் போய்விட்டது என்று வருத்தத்தில் புலம்புகிறார்கள். இதில் ஈஸ்வரி, ஜீவானந்தம் தற்போது கஷ்டப்படுவதற்கு நானும் ஒரு காரணமாகிட்டேன் என்பது நினைக்கும் போது ரொம்ப கவலையாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மேலும் ஜீவானந்தத்தை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு பேசுகிறார். அத்துடன் குணசேகரன் செய்த அட்டூழியத்தால் அவரை தூக்கி எறியவும் தயாராகி விட்டார் ஈஸ்வரி. அடுத்ததாக மருமகள்கள் அனைவரும் ஜீவானந்தத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டார்கள். இனி இவர்கள் அனைவரும் தன்னிச்சையாக இருந்து செயல்பட போகிறார்கள். இதுதான் அந்த வீட்டில் இருக்கும் குணசேகரன் மற்றும் தம்பிகளுக்கு கிடைத்த முதல் தண்டனை.

Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்

Trending News