திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

4 வெற்றி இயக்குனர்களை அலைய விடும் சிம்பு.. அடுத்து எஸ்டிஆர் கையில் எடுக்கப் போகும் அவதாரம்

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருந்த சிம்பு தற்போது ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்த ப்ராஜக்ட்காக காத்திருக்கிறார் சிம்பு. அதற்காக 4 இயக்குனர்களை அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read: பத்து தல முடிச்ச சிம்பு.. 12 வருடங்களுக்கு பின் கையில் எடுத்த சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்

ஏஆர் முருகதாஸ்: கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாரை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் அதன் பிறகு எந்த திரைப்படங்களையும் இயக்கவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் டைரக்சன் பக்கம் திரும்பி இருக்கிறார். இவரிடம் சிம்பு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கதையும் கேட்டு விட்டு டீலில் விட்டு வருகிறார் எஸ்டிஆர்.

சுதா கொங்கரா: சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பள விஷயத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் யாரு யாரை டீலில் விட்டு வருகிறார் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் சிம்புதான் சுதா கொங்கராவுக்கு சரியான பதில் கூறவில்லை என்று சொல்கிறார்கள்.

Also Read: சிம்பு பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பத்து தல படத்துக்கு இவ்வளவு தான் டிமாண்ட்டா!

லிங்குசாமி: முன்பு ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இவர் சமீபத்தில் படங்கள் ஏதும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இவரும் சிம்புவிற்கு கதையை ஒன்று தயார் பண்ணி வைத்து விட்டு வரிசையில் இருக்கிறார்.

வெங்கட் பிரபு: மாநாடு படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபு சிம்புவிடம் வித்தியாசமான ஒரு கதை களத்தை கூறி ஓகே வாங்கியுள்ளாராம்.  விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: சிம்புவை திட்ட சொன்னாங்க.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த நடிகை ராதிகா

இவ்வாறு மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு. இந்த 4 இயக்குனர்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார். இதன் பிறகு எந்த இயக்குனரின் படத்தில் அடுத்த நடித்து, புது அவதாரம் எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News