வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஷங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் இயக்குனர்கள்.. வேகமெடுக்கும் இந்தியன் 2

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில பல பிரச்சனைகளின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இப்படம் உதயநிதி ஸ்டாலினின் உதவியால் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படம் பாதியிலேயே நின்று போனதால் ஷங்கர் தெலுங்கு பக்கம் ராம் சரணை வைத்து படத்தை இயக்க சென்று விட்டார். தற்போது மீண்டும் இந்தியன் 2 சூடு பிடித்துள்ளதால் அவர் இரண்டு பக்கமும் மாறி மாறி பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Also read : இந்தியன் 2 படத்தில் சிக்கலை ஏற்படுத்திய சிபிஐ கேரக்டர்.. ஷங்கரை காப்பாற்றிவிட்ட நடிகர்

இப்படி ஒரு இக்கட்டான நிலைமையை சமாளிப்பதற்காக சங்கர் தற்போது ஒரு சாமர்த்தியமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். என்னவென்றால் இந்தியன் 2 படத்தை தற்போது நான்கு இயக்குனர்கள் இயக்குகிறார்கள் என்கின்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் கமல் நடிக்கும் காட்சிகள் அனைத்தையும் சங்கர் இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் மீதி உள்ள காட்சிகளை பிரபல இயக்குனர்களான வசந்தபாலன், சிம்புதேவன், அறிவழகன் ஆகியோர் இயக்கி வருகிறார்களாம். இவர்கள் சங்கரிடம் உதவி இயக்குனர்களாக இருந்து இன்று முன்னணி இயக்குனர்களாக மாறி இருக்கிறார்கள்.

Also read : மருதநாயகத்திற்காக ஆக்ராவிலிருந்து வந்த பறவை.. ஆண்டவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்

அந்த வகையில் அவர்கள் மூவரும் சங்கருக்கு தோள் கொடுத்து தூக்கி விடும் வகையில் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இது சங்கருக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறதாம். இதனால் இந்தியன் 2 திரைப்படம் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி படு வேகமாக நகர்ந்து வருகிறது.

கூடிய விரைவில் இப்படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் சங்கரின் திட்டம். அதற்காக அவர் இரவு பகல் பாராமல் தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் 4 இயக்குனர்கள் இப்படத்தை இயக்குவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேபோன்று படத்தின் தரமும் திருப்திகரமாக இருக்கும் என்று பட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Also read : பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

Trending News