புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராஜு முருகன் இயக்கி எழுதிய 4 படங்கள்.. பார்வையற்ற ஜோடிகளுக்குள் காதலைப் புகுத்திய குக்கூ

4 films directed and written by Raju Murugan: சிலரிடம் திறமைகள் இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து வெற்றியை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் போட்டி நிறைந்த தற்போதைய உலகில் திறமையுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் கைகூடி வரணும் என்பதற்கு ஏற்ப நிலைமை மாறிவிட்டது. முக்கியமாக திறமை இருந்தால் மட்டும் போதாது அதற்கேற்ற மாதிரி வெற்றியும் பெற தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி தமிழ் சினிமாவிற்குள் திறமையுடன் நுழைந்தவர் தான் இயக்குனர் ராஜு முருகன். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனராக இவருடைய பயணத்தை தொடங்கினார். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு குக்கூ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் தினேஷ் மற்றும் மாளவிகா நாயர் பார்வையற்ற ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள்.

காதலின் உணர்வுக்கும், அழகுக்கும் எந்த சம்பந்தமே இல்லை என்பதற்கு ஏற்ப பார்வையற்ற ஜோடிகளுக்குள் காதலை புகுத்தி இயக்குனரின் சிறந்த படைப்பை அர்ப்பணித்து இருப்பார். அடுத்ததாக 2016 ஆம் ஆண்டு குரு சோமசுந்தரம் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ஜோக்கர் திரைப்படம் வெளிவந்தது. இயக்குனராக அறிமுகமான இரண்டாவது படத்திலேயே ஜோக்கர் சிறந்த புது படத்திற்கு ஆன 64வது தேசிய விருதை பெற்றது.

Also read: கல்யாணம் பண்ண மாட்டோம்னு வெட்டி சபதம் போட்ட 5 படங்கள்.. ஜொள்ளு விட்டு முதல் ஆளாய் அஜித் பண்ணிய காதல்

அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு ஜீவா, லால் ஜோஸ் நடிப்பில் ஜிப்சி திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகவில்லை. அதனால் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த சுவடு தெரியாமல் படம் மொக்கையாக போய்விட்டது. இதனை அடுத்து கடந்த வருடம் கார்த்திக்கின் 25 வது படமாக ஜப்பான் திரைப்படம் வெளிவந்தது.

இப்படத்தை பார்த்தவர்கள் கழுவி கழுவி ஊத்தும் அளவிற்கு ஒன்றுமில்லாமல் படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இப்படி ஒரு படத்தை பார்ப்பதற்கு சும்மாவே இருந்துவிடலாம் என்று பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை வாரிவிட்டார்கள். அந்த அளவிற்கு ராஜு முருகன் இயக்கத்தில் மிகப்பெரிய சறுக்காக அமைந்துவிட்டது.

ஆக மொத்தத்தில் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் எடுத்த முதல் இரண்டு படம்தான் வெற்றி பெற்று இருக்கிறது. தொடர்ந்து இவருடைய முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: காதல் கதைகள் தோத்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள்.. விஜய்யின் சோகம் கூட சுகமானது 

Trending News