வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்ட நயன்தாராவின் 4 படங்கள்.. இரண்டாவது படத்திலேயே எகிறிய மார்க்கெட்

Rajini-Nayanthara: நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். அதை தொடர்ந்து தன் அடுத்த கட்ட படங்களை மேற்கொள்ளும் ரஜினியுடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் கலக்கிய 4 படங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

மலையாள மொழி படங்களில் ஹீரோயினாய் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின் தமிழில் இவர் ஏற்ற முதல் படம் தான் அய்யா. வயது வித்தியாசம் பார்க்காமல் இவர் ஏற்ற முதல் கதாபாத்திரமே அவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: அஜித் தெரியாதுன்னு சொன்னது ஒரு குத்தமா.? கொலவெறியில் நெட்டிசன்கள் செய்த சம்பவம்

அதைத்தொடர்ந்து சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் ஜோடியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். இவர்கள் இருவரின் நடிப்பில் இப்படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா பாட்டில் பட்டைய கிளப்பினார்.

அவ்வாறு ரஜினியுடன் மேற்கொண்ட இரண்டாவது படத்திலேயே தன் மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் நயன்தாரா என்றால் அது மிகையாகாது. அதைத்தொடர்ந்து எண்ணற்ற படங்களில் வெற்றி கண்டு தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டாராய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also Read: ஹீரோயினை விட அழகான 6 சப்போர்ட்டிங் ஹீரோயின்.. அதிலும் ரஜினி, கமல் மருமகள்களின் அழகை அடிச்சுக்க ஆளே இல்லை!

இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாய், ஏற்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் நடிப்பையும், உடலையும் மாற்றி கொள்ளும் வல்லமை கொண்டவர். மேலும் சந்திரமுகியின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் நயன்தாரா இணைந்து நடித்த படம் தான் குசேலன்.

இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் பெருதளவு பேசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தர்பார் படத்தில் ரஜினிக்கு துணையான கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார். மேலும் அண்ணாத்த படத்தில் ரஜினியின் காதலியாக முக்கிய பங்காற்றி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜெயிலர் வர்மனை விட 10 மடங்கு டேஞ்சரான விசுவாசிகள்.. மனித உயிரை காவு வாங்கும் விநாயகனின் வளர்ப்பு

Trending News