4 films that ran in theaters for more than 365 days: இப்பொழுது இருக்கும் லேட்டஸ்ட் சினிமாவில் என்ன படங்கள் எத்தனை படங்கள் வருகிறது என்று தெரியாத அளவிற்கு எக்கச்சக்கமாக வந்து கொண்டே இருக்கிறது. அதனாலேயே கதையின் அருமையும், படங்களின் மௌசும் குறைந்துவிட்டது. ஆனால் 80, 90களில் ஒரு படம் வந்தாலும் அது நச்சுன்னு இருக்கும் அளவிற்கு மக்களிடம் ஒட்டிக் கொள்ளும். அந்த வகையில் சில படங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்களில் ஓடி வெற்றி பெற்று இருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
சின்னத்தம்பி: பி.வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு பிரபு, குஷ்பூ, மனோரமா மற்றும் ராதாரவி நடிப்பில் சின்னத்தம்பி படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது உலகமே தெரியாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றித் திரியும் கள்ளம் கபடம் அற்ற பிரபு, துள்ளித் திரிந்து பறக்க நினைக்கும் குஷ்புவின் ஆசைகளும் ஒன்றாக சேரும் பட்சத்தில் வறட்டு கௌரவத்தால் இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையே அழகாக காட்டப்பட்டிருக்கும். இப்படம் பிரபுவின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர்களில் ஒன்றாகவும், 365 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
Also read: ஹவுஸ்ஃபுல் ஆகாத ரஜினியின் ஒரே படம்.. எழுந்த பின்னும் மீண்டும் கீழே விழுந்த சூப்பர் ஸ்டார்
மூன்று முடிச்சு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி நடிப்பில் மூன்று முடிச்சு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது ஒரே ரூமில் கமல் மற்றும் ரஜினி நண்பர்களாக இருக்கும் பொழுது அதற்கு அடுக்குமாடியில் குடியிருக்கும் ஸ்ரீதேவி மீது ஏற்படும் காதல். பிறகு அதன் மூலம் ஏற்படும் பிரச்சனையே கதையாக எடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு பெண்ணின் மீது ஆசை வந்தால் தன்னை நல்லவர்கள் போல் தான் காட்டுவார்கள். ஆனால் ரஜினியுடைய கேரக்டர் தன்னை கெட்டவனாக காட்டி நடித்திருப்பது புதுசாக இருந்தது.
மூன்றாம் பிறை: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி நடிப்பில் மூன்றாம் பிறை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகங்கள் மறந்து போன நிலையில் கமல் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருவார். அந்த சமயத்தில் இருவர்களுடைய புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி வரும் நேரத்தில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகம் வந்ததால் கமலை விட்டு பிரிந்து போகும் கிளைமாக்ஸ் காட்சி அருமையாக அமைந்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி குவித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி, இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.
கரகாட்டக்காரன்: கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் படம் வெளிவந்தது. இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் ஒரு சில படங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும் அப்படி 33 வருடங்களுக்கு முன் கிராமத்து நாயகனாக ஜொலித்து வந்த ராமராஜன் நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. இப்படி ஒரு கிளாசிக் ஹிட்டான இப்படத்தை எத்தனை முறை டிவியில் பார்த்தாலும் சலிப்பு தட்டாத வகையில் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. மேலும் இப்படம் வெளியாகி அனைத்து திரையரங்கிலும் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி வசூலை பெற்றிருக்கிறது.
Also read: வேட்டையனில் ரெண்டு விஷயங்களை தோலுரித்த ரஜினி.. 15 நாளில் பூசணிக்காய் உடைக்கும் சூப்பர் ஸ்டார்