வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அறிமுகக் காட்சியில் அனல் பறக்க விட்ட 4 ஹீரோக்கள்.. இப்பவும் ரோலக்ஸ்காக காத்துக் கிடக்கும் வெறி பிடித்த ரசிகர்கள்

பொதுவாக டாப் ஹீரோக்கள் அனைவரும் நடிக்கும் படங்களில் அவர்களின் அறிமுக காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைக்கப்படும். சில நடிகர்களுக்கு அறிமுக காட்சியே மாஸ் பாடலுடன் தொடங்கும். ஆனால் சில நடிகர்களுக்கு நாம் எதிர்பார்க்காத வகையில் என்ட்ரி சீன் கலக்கலாக அமைந்திருக்கும். அந்த வகையில் இந்த வருடத்தில் அறிமுக காட்சியில் அனல் பறக்க விட்ட நான்கு நடிகர்களை பற்றியும், அது எந்தெந்த படங்கள் என்பதை பற்றியும் இங்கு காண்போம்.

விஜய் சேதுபதி: இந்த வருடத்தில் இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை தேடிக்கொடுத்த திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் இவருடைய அறிமுக காட்சியே படு பயங்கரமாக இருக்கும். அதாவது ஒரு போலீஸ் இவரை ஆட்டோவில் கைது செய்து அழைத்துப் போவார்.

அப்போது இவர் போதை மருந்தை வாயில் போட்டுக்கொண்டு போலீசின் துப்பாக்கியை எடுத்து அவரையே கொன்று விடுவார். அதன் பிறகு ஆட்டோவில் இருந்து அவர் படு மாசாக வெளியேறி செல்லும் அந்த காட்சி தியேட்டர்களில் பலத்த கைத்தட்டலை பெற்றது.

Also read: ஃபர்ஸ்ட் லுக் வந்து டிராப்பான சூர்யாவின் 3 படங்கள்.. பாலாவுக்கு முன்பு டீலில் விட்ட 2 இயக்குனர்கள்

ராம்சரண்: ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இவர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல கோடி வசூல் படைத்தது. அந்தப் படத்தில் போலீசாக வரும் ராம் சரணின் இன்ட்ரோ சீன் வேற லெவலில் இருக்கும். அதாவது போலீசுக்கு எதிராக மக்கள் ஒன்று கூடி கோஷம் எழுப்புவார்கள். அப்போது தனி ஒரு மனிதனாக அவர்களை ராம்சரண் சமாளிப்பார். இந்த காட்சியைப் பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து கொண்டாடினார்கள்.

யாஷ்: கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாக இருக்கும் இவருடைய அறிமுகக் காட்சி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த வருடம் வெளியான கேஜிஎப் 2 திரைப்படத்தில் இவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வருவது போன்ற அறிமுகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது எதிரியின் இடத்திற்கே செல்லும் இவர் அங்கிருக்கும் வில்லனை கொன்று விட்டு பஞ்ச் டயலாக் ஒன்று பேசுவார். அந்த காட்சியும், வசனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Also read: இன்னும் அவருக்கு மட்டும் வில்லனாக நடிக்காத விஜய் சேதுபதி.. இயக்குனரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்

சூர்யா: திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பும், பாராட்டும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்தது ஆச்சரியம் தான். ஏனென்றால் விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே இவர் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் படத்தில் நடித்திருந்த மற்றவர்களை காட்டிலும் ரொம்பவும் வெறித்தனமாக இருந்தது.

ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் சூர்யா தன் ஆள் ஒருவனையே தலையை வெட்டிக் கொள்வார். அதுதான் அவருடைய அறிமுகக் காட்சி. ரத்தக் களரியுடன் முகத்தில் கொடூரமான சிரிப்புடன் அறிமுகமான சூர்யாவை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் மிரண்டு போனார்கள். அந்த அளவுக்கு அவருடைய கேரக்டர் இருந்தது. இப்போதும் கூட விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காகவும் சூர்யாவுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: சூர்யாவை தொறத்திட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

Trending News