Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதி பிறந்தநாளன்று செம ட்ரீட் தான்.. ரீ ரிலீஸாகும் விஜய்யின் 4 ஹிட் படங்கள்

தளபதி பிறந்தநாளன்று செம ட்ரீட் தான்.. ரீ ரிலீஸாகும் விஜய்யின் 4 ஹிட் படங்கள்

Vijay : விஜய்யின் பிறந்தநாள் வருகின்ற ஜூலை 22ஆம் தேதி வர உள்ளது. அன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த பிறந்தநாள் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைய இருக்கிறது. ஏனென்றால் இந்த வருடத்துடன் விஜய் […]

Vijay : விஜய்யின் பிறந்தநாள் வருகின்ற ஜூலை 22ஆம் தேதி வர உள்ளது. அன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த பிறந்தநாள் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைய இருக்கிறது. ஏனென்றால் இந்த வருடத்துடன் விஜய் தனது திரைப்பயணத்தை முடித்துக் கொள்ள இருக்கிறார்.

ஆகையால் அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஐந்து ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் ஆகிறது. விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக அங்கு இந்த படங்கள் வெளியாக இருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்த படம் தான் மெர்சல். இந்த படம் ஜூன் 22 ஆம் தேதி கேரளாவில் வெளியாகிறது. அடுத்ததாக விஜய்யின் நடிப்பில் வெளியான திருமலை படம் ஜூன் 28ஆம் தேதி காலை 8 மணிக்கு அரோமா தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.

விஜய்யின் நான்கு ரீ ரிலீஸ் படங்கள்

இதற்கு அடுத்தபடியாக கத்தி படம் ஜூன் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தன்யா தியேட்டரில் வெளியாக இருக்கிறது. மேலும் இதே படம் விகேஜி சினிமாஸ் தியேட்டரிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் லியோ. இந்த படம் கோலம் நண்பன்ஸ் தியேட்டரில் ஒன்பது மணிக்கு வெளியாகிறது. ஜூன் 22 ஆம் தேதி கேரளாவில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டமாக தான் இருக்கப் போகிறது.

இப்போது விஜய், எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.