திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டிஆர்பி போனதால் அதிரடியாக வரவுள்ள 2 பிரம்மாண்ட நிகழ்ச்சி.. 4 ஷோக்களுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி சின்னத்திரையில் கால் பதித்து சில வருடங்கள் ஆனாலும் தனது வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்களைக் கவர்ந்திழித்தது. ஆனாலும் சில மாதங்களாகவே விஜய் டிவியின் டிஆர்பி குறைவாக உள்ளது. சீரியல்களும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் சன் டிவி எதிர்நீச்சல் என்ற தொடரின் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை எப்படியாவது அடித்து தும்சம் செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பக்கா பிளான் போட்டு உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் நான்கு நிகழ்ச்சிகளுக்கு எண்டு கார்டு போட்டு பிரம்மாண்ட இரண்டு நிகழ்ச்சியை இறக்க உள்ளது.

Also Read : பிரதமரை பதவி விலகச் சொன்ன விஜய் டிவி பிரபலம்.. 288-க்கும் மேல் உயிரிழப்பால் கொந்தளித்த சம்பவம்

இதன் மூலம் எப்படியும் டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெறலாம் என்ற நம்பிக்கையில் விஜய் டிவி இருக்கிறது. அதாவது இப்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேரத்தில் ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நான்கு நிகழ்ச்சிகளையும் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வர உள்ளனர். இந்த நேரத்தில் ரெடி ஸ்டெடி போ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களில் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆகையால் மீண்டும் இதே நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

Also Read : மீண்டும் விஜய் டிவியில் தஞ்சமடைந்த டிடி.. பிரம்மாண்டமாக தொடங்க உள்ள சீசன் 3

அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியை பாக்கியலட்சுமி தொடர் எழில் மற்றும் ரக்சன் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். மேலும் அடுத்ததாக ஜூலை மாதத்தில் பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதற்கான போட்டியாளர்களை இப்போது தேர்வு செய்யும் பணியில் விஜய் டிவி இறங்கி உள்ளது.

அதன்படி இந்த சீசனில் யார் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் பிக் பாஸ் பொறுத்த வரையில் சர்ச்சையான போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதை தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆகையால் இப்போது சின்னத்திரையில் நிறைய சர்ச்சை சென்று கொண்டிருப்பதால் அதிலிருந்து நிறைய நபர்கள் பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

Also Read : சீக்ரெட் ஆக திருமணத்தை முடித்த விஜய் டிவி தீனா.. மனைவியுடன் வைரலாகும் புகைப்படம்

Trending News