சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

புள்ள பூச்சி பாபர் அசாம்க்கு குழி தோண்டிய 4 சக வீரர்கள்.. தனிமைப்படுத்தி சூழ்ச்சி வலையில் சின்னாபின்னமாகும் கேப்டன்

Pakistan team captain Babar Assam: பாகிஸ்தான் அணி நடப்பு 2023 உலக கோப்பை போட்டியில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது .ஆரம்பத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை எளிதாக வீழ்த்தி மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது. ஆனால் அத்தோடு அவர்கள் பாச்ச பலிக்கவில்லை, அடுத்தடுத்து இடிபோல் மோசமான தோல்விகள்.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான  போட்டியில் மண்ணை கவியது. குறிப்பாக இந்திய அணியுடன் எட்டாவது உலகக் கோப்பை தோல்விக்கு அந்த நாட்டில் கலவரமே நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மோசமான அணியை உலகக் கோப்பைக்கு அனுப்பி வைத்து ஒட்டுமொத்த நாட்டையே அசிங்கப்படுத்தி வருகிறது என ஊடகங்கள்  சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

தற்போது எல்லாவற்றிற்கும் மேலாக பாகிஸ்தான் அணி பிளவு பட்டுவிட்டதாகவும். அணி வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு இரு தரப்பாக மாறிவிட்டது என்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது இப்போது ஏற்பட்ட பிளவு இல்லை என்றும் ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலேயே அவர்களுக்குள்  சலசலப்பு மற்றும் கைகலப்பு வந்துவிட்டது என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அணியில் கேப்டன் பாபர் அசாம்மை சகவீரர்கள் மதிப்பதே இல்லை. குறிப்பாக முகமது ரிஸ்வான், முகமது நவாஸ், ஹாரிஸ் ரவூப் ,இப்திகார் போன்ற சக வீரர்களே அவருக்கு எதிராக செயல்படுகின்றனர். அதிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறாராம்.

அணியில் “டி ஆர் எஸ்” கேட்கும் போது, முகமது ரிஸ்வான் ஏனோ தானோ என்று பதிலளிக்கிறாராம். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு தான் “எல் பி டபிள்யூ”  அவுட் தெள்ளத் தெளிவாக தெரியும், அதிலையும் கோட்டை விடுகிறார் ரிஷ்வான். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படாத ஹாரிஸ் ரவூப்க்கு முழு சுதந்திரம் அளித்து அணியில் அவர் இடத்தை காப்பாற்றி வருகிறார்.

இப்பொழுது பாபர் அசாம் மற்ற வீரர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் மற்ற வீரர்களின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. இது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது போட்டியின் இடைவெளியில் முகமது நவாஸ் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போது அருகில் கூட வராமல் ஒதுங்கி நின்றார் பாபர் அசாம்.

Trending News