ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நோ பாலில் கொடுக்கப்படும் 4 அவுட்டுகள்.. விராட் கோலி போல்ட் ஆகியும் விதிமுறையால் ஏற்பட்ட பரிதாபம்

நோ பால்ஆரம்ப காலகட்டத்தில் இதற்கு ஒரு ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இப்பொழுது இந்த பந்தை விசியதர்காக தண்டனை கொடுக்கும் பட்சத்தில் அதற்கு ப்ரீ ஹிட் என்ற புதிய விதிமுறையை அமல்படுதியுள்ளனர்.

ஐசிசி விதியின்படி ஒரு பிரிஹிட் பந்தில், பந்தை கையால் தொடுவது, களத்தில் பீல்டரை தடுப்பது, ரன்அவுட்,  பந்தை இரண்டு முறை பேட்டால் அடிப்பது, இப்படி நான்கு முறைகளில் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்ய முடியும்.

Also Read: வெளிநாட்டில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய 3 கிரிக்கெட் வீரர்கள்!

இது ஒருபுறமிருக்க, தற்சமயம் நடத்து கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்த இந்த போட்டியில் சுவாரசியமான விஷயங்கள் பல நடந்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு கடைசி ஓவரில் ஒரு 16 ரன்கள் தேவைப்பட்டது. தேவைப்பட்ட 16 ரன்களையும் இந்திய அணி அடித்து வெற்றி பெற்றுள்ளது. இதில் நடந்துள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் கடைசி ஓவரில் 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

Also Read: பேட்ஸ்மேன்களை நடுங்கவைக்கும் இந்திய அணி.. வரலாறு காணாத அசுரபலம், நட்சத்திர வீரர் புகழாரம்.!

இதை எதிர் கொண்ட விராட் கோலி நான்காவது பந்தில் அடித்த சிக்ஸர் தான் சர்சையை கிளப்பியுள்ளது. அந்த பந்து விராட் கோலியின் இடுப்பிற்கு மேலே சென்றதால் கோலி, கேட்டு கொண்டதன் அடிப்படையில் நடுவர்கள் அதை நோபால் என்று அறிவித்தனர்.

இதைத்தான் பாகிஸ்தான் அணியினர் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருகின்றனர். அது எப்படி நோ பால் கொடுக்கலாம் என்று கேட்டு சண்டையிட்டனர். அதன்பின் ப்ரீ ஹிட் டெலிவரி, முதலில் ஒய்டு பந்தாக வீசப்பட்டது.

மீண்டும் அந்த பந்தை வீசிய நவாஸ், விராட் கோலியை கிளீன் போல்ட் ஆக்கினார். ஆனால் அது நோ பால் என்பதால் ஐசிசி கிரிக்கெட்டின் விதியின்படி அது செல்லுபடியாகாது . இந்த பந்தில் பைஸ் மூலம் 3 ரன்கள் இந்திய அணி எடுத்தனர். இதற்கும் பாகிஸ்தான் அணியினர் போர்க்கொடி தூக்கினர். ஐசிசியின் விதியின் படி தான் ரன்கள் கொடுக்கப்பட்டது என்று நடுவர்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இப்படி இந்த போட்டி பல தெரியாத விதிகளை ரசிகர்களுக்கு நியாபகப்படுதிள்ளது.

Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி

Trending News