வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மேடையில் நடந்த அவமானத்தை உடைத்தெறிந்த 40 கதை அஸ்வின்.. செம்பி படம் பார்த்து கமல் கூறிய விமர்சனம்

தனியார் தொலைக்காட்சி நடத்திய குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் இணையத்தில் கலக்கி வருகின்றனர். இதில் முக்கியமாக ஷிவாங்கி, புகழ், பாலா, ஸ்ருதிகா, மணிமேகலை என லிஸ்டை சொல்லிக்கொண்டே போகலாம். இதனிடையே இந்நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்ட அஸ்வினுக்கு படங்களில் ஹீரோவாக நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்தாண்டு இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான என்ன சொல்ல போகிறார் திரைப்படம் அஸ்வின் நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்தது. இதனிடையே அந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது கோட் சூட் எல்லாம் போட்டு ஜம்முனு மைக்கில் நின்று பேசிய அஸ்வின், பெரும் சர்ச்சைக்குள்ளனர்.அதில் தான் 40 கதைகளை இந்த படத்திற்கு முன்பாக கேட்டேன், ஆனால் அந்த கதையை கேட்டு தூங்கிவிட்டேன், இதுவே எனது பெரும் கெட்டப் பழக்கம் என்று நக்கலாக பேசினார்.

Also Read: அஸ்வின் மாதிரி ஆட்டம் போடும் குக் வித் கோமாளி நடிகை.. இப்படியே போனா காணாம போயிடுவீங்க!

இவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், தமிழ் சினிமாவின் பல பிரபலங்களும் அவரை செமத்தியாக திட்டி தீர்த்தனர். அதற்கும் மேலாக ரசிகர்களும் அவரை ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் என்று நக்கலான கமெண்டுகளை பதிவு செய்து கலாய்த்து தள்ளினர். 40 படத்தின் கதையை சொன்ன இயக்குனர்களை அவமானப்படுத்தும் வகையில் அஸ்வினின் பேச்சு இருப்பதாகவும், நடித்த முதல் படத்திலேயே இவ்வளவு திமிரு இருக்க கூடாது எனவும் பலரும் அவரை எச்சரித்தனர்.

அதன் பின்பு பகீரங்கமாக சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்ட அஸ்வின் அந்த படத்தின் தோல்விக்கு பின் தொடர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் முக்கியமாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கோவை சரளா முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

Also Read:  செம்பியாக ரீ-என்ட்ரி கொடுத்த கோவை சரளா.. தேசிய விருது கன்பார்ம், மிரள வைக்கும் ட்ரெய்லர்

மேலும் அஸ்வினும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சென்னையில் இப்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், கமலஹாசன் கலந்துக் கொண்டு செம்பி படம் குறித்து பேசினார். அப்போது அஸ்வினை பார்த்து, என்னிடம் நான் நல்ல நடித்திருக்கிறேனா என்று கேட்டீர்கள். நீங்கள் நன்றாக நடித்ததால் தான் உங்களை இயக்குனர் தேர்வு செய்துள்ளார் என அஸ்வினிடம் கமல்ஹாசன் கூறினார்.

உடனே எழுந்து வந்த அஸ்வின் கமலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அஸ்வினுக்கு இந்தாண்டு தொடக்கத்தில் அவர் வாயால் பெரும் சரிவை சந்தித்த நிலையில், கடைசியில் கமலிடம் நல்ல பெயரை வாங்கியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு இன்பமாக உள்ளது .மேலும் அஸ்வின் இதே போல தன்னடக்கத்தோடு இருந்து பல படங்களில் நடித்தால் நல்லது என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Also Read: கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

Trending News