5 celebrities controversial speech: தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள், அது இந்த ஐந்து நடிகர்களுக்கு சரியாக பொருந்தும். மைக்கை நீட்டினால் இஷ்டத்திற்கு ஏதாவது ஒன்றை பேசி விடலாம் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைத்து இவர்கள் பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. யார் அந்த ஐந்து நடிகர்கள் மற்றும் அவர்கள் எந்த நடிகைகளை பற்றி தவறாக பேசினார்கள் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரோபோ ஷங்கர்: தன்னுடைய நகைச்சுவையால் கலக்கிக் கொண்டிருந்த ரோபோ சங்கர் டைமிங் காமெடி ஒர்க் அவுட் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் பார்ட்னர் படத்தில் ஹன்சிகாவை பற்றி ஏடாகூடமாக பேசி மொத்தமாக வாங்கி கட்டிக் கொண்டார். ஹன்சிகாவின் காலையாவது தொட்டு விடலாமா என்று முயற்சி செய்தேன் என அசடு வழிய அவர் செய்த காமெடி அவருக்கே செய்வினையாக மாறியது. எந்த அளவுக்கு பெயர் வாங்கி வைத்தாரோ அதை மொத்தமாக எடுத்துக் கொண்டார்.
சதிஷ்: சிவகார்த்திகேயன் மட்டும் இல்லேன்னா சதீஷ் என்று ஒரு நடிகர் இருக்கிறது பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் காமெடி சொல்றேன் தயவு செஞ்சு எல்லாரும் சிரிங்கன்னு அவரே வாய் திறந்து கேட்டால்தான் உண்டு. இவர் ஒரு பட விழா மேடையில் சன்னி லியோன் புடவை கட்டிக் கொண்டு வந்ததை பெரிய அளவில் புகழ்ந்து விட்டு அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷா குப்தாவின் ஆடையை முகம் சுளிக்கும் அளவுக்கு விமர்சித்து விட்டார்.
Also Read:பிசினஸில் நயன்தாராவை மிஞ்சிய அனிருத்.. சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட தொழில்
மன்சூர் அலிகான்: லோகேஷ் கனகராஜால் 2கே கிட்ஸ்களிடம் மீண்டும் ட்ரெண்டான மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி ஏடாகூடமாக பேசி மொத்தமாக பேரை கெடுத்துக் கொண்டார். த்ரிஷாவுடன் தனக்கு லியோ படத்தில் சேர்ந்து நடிக்கும் காட்சி அமையவில்லை என்பதை நகைச்சுவையாக சொல்கிறேன் என்ற பெயரில், மோசமாக பேசி கடைசியில் நீதிமன்றம் அவருக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சர்ச்சை பெரிதாகி விட்டது.
டி ராஜேந்தர்: டி ராஜேந்தர் கேமியோ ரோலில் நடித்த விழித்திரு படத்தில் நடிகை சாய் தன்ஷிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஒரு பேட்டியில் படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் நன்றி சொன்ன தன்ஷிகா ராஜேந்தர் பெயரை மறந்துவிட்டார். இதை பெரிய அளவில் எடுத்துக் கொண்ட ராஜேந்தர் தன்ஷிகா இப்போது ரஜினியின் கபாலி படத்தில் நடிப்பதால் தான் தன்னை எல்லாம் அவருக்கு ஒரு ஆளாக தெரியவில்லை என்பது போல் ரொம்ப மன கஷ்டம் ஏற்படும் படி பேசி விட்டார்.
ராதாரவி: ராதாரவி தேவையில்லாத இடத்தில் நயன்தாராவை பற்றி பேசிய தவறான விஷயத்தால் அவருடைய சினிமா வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டுமே பின்னடைவை சந்தித்தது. கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமயத்தில் ராதாரவி நயன்தாராவை பற்றி முகம் சுளிக்கும் அளவுக்கு ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த பிரச்சனை நயன்தாரா தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பை கொண்டு வர அவர் திமுக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அவருடைய இந்த கருத்திற்கு அவருடைய சொந்த தங்கச்சி ராதிகாவே கண்டனம் தெரிவித்திருந்தார்.