ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோடி கோடியா பணம் வச்சு என்ன பிரயோஜனம்.. தமிழனு சொல்லிட்டே வெள்ளத்திற்கு உதவாத 5 நடிகர்கள்

5 actors didn’t help the flood: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து மீள முடியாமல் சென்னை மக்கள் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். அதிலும் ஏரி கரையில் இருக்கும் மக்கள் தங்களது உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். இவர்களுக்கு என்ன தான் அரசாங்கம் நிவாரண உதவியை வழங்கினாலும், கோடிக்கணக்கில் பணம் வச்சுக்கிட்டு மக்களுக்கு உதவாமல் இன்னும் கல்நெஞ்சமாய் 5 நடிகர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் தமிழர்கள் என வாய் கிழிய பேசுகிறார்களே தவிர, கஷ்டப்படுற மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல், இருக்கிற காசை இறுக்கிப் பிடிக்கின்றனர். இங்கு மக்கள் சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் இருக்கிறாங்க. ஆனால் இவர்கள் மட்டும் லைம்லைட் வெளிச்சத்தில் பண மழையில் குளித்து கொண்டிருக்கின்றனர்.

ஆடம்பர வாழ்க்கையே பிடிக்காது என ஓவரா அளப்பர காட்டுகிற எஸ்ஜே சூர்யா வெள்ள நிவாரண நிதியாக எதுவுமே இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல் தான் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை, யாரையுமே பாகுபாடு பார்க்காமல் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து தன்னுடைய பாசத்தை காட்டுற விஜய் சேதுபதியின் உண்மையான பாசம் இப்ப எங்க போச்சு? அவரும் வெள்ளம் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூட நவட்டல.

Also Read: இனி தனுசுக்கு போட்டி சிம்பு இல்ல இவர்தான்.. வளர்த்துவிட்ட கெடா மார்ல பாயுது

வெள்ளத்திற்கு உதவாத 5 நடிகர்கள்

இவர்களைத் தொடர்ந்து ஊனமுற்றவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கொஞ்சம் கூட கண்டுக்கல. அதே போல் தான் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் தமிழன் என்று சொல்லியே கழுத்தை அறுத்து விட்டனர்.

இவர்கள் எல்லோரும் பெரும்பாலும் உதவி செய்யக் கூடியவர்கள் தான். ஆனால் இப்பொழுது வரையிலும் இவர்களை பற்றியோ, இவர்கள் செய்ததைப் பற்றியோ எந்த நியூசும் வெளியில வரவில்லை. இந்த ஐந்து நடிகர்களும் அஜித் மாதிரி வெளியில் தெரியாம உதவி செய்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனா அதை வெளியில சொன்னாதானே தெரிய வரும்.

Also Read: 2015 முதல் மிக்ஜாம் வரை சிவகார்த்திகேயன் வழங்கிய 5 நிதி உதவி.. அப்ப சிம்புல்லாம் ஒண்ணுமே இல்லையா?

Trending News