வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

சிறுவயது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திய 5 நடிகர்கள்.. குட்டி பவானியாக மிரள விட்ட மகேந்திரன்

முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் அவர்களது சிறுவயது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி சிறப்பாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவை கலக்கிய 5 பிரபலங்கள், அந்தப் படத்தில் நடித்ததற்கு பிறகு அவர்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.

மகேந்திரன்: 90களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கிய மாஸ்டர் மகேந்திரன், அதன் பிறகு விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அவர் கதாநாயகனாக தமிழ், தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்- விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் சிறு வயது குட்டி பவானி ஆக நடித்த மிரள விட்டார். இவர் திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் அதை சரியாக பயன்படுத்தி நல்ல பெயரும் புகழும் பெற்றார்.

விஜய் சேதுபதி: ஹீரோ மட்டுமல்ல வில்லன், திருநங்கை, வயதான கேரக்டர் என எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிக் காட்டும் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், லக்ஷ்மி மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜிகர்தண்டா படத்தில் ரௌடியாக நடித்திருக்கும் பாபி சிம்ஹாவின் சிறுவயது தோற்றத்தில் விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்.

வினோத் கிஷன்: 2001ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் நந்தா படத்தில் சிறுவயது சூர்யாவுக்காக தனது தந்தையை கொலை செய்யும் மகனாக நடிகர் வினோத் கிஷன் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இவரது பயங்கரமான பார்வை அந்தப்படத்தில் பார்ப்போரை பயமுறுத்திருக்கும். அதுமட்டுமல்ல கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்திலும் இவர் வில்லனாக நடித்திருப்பார்.

ஜான் ராபின்சன்: என்னை அறிந்தால் படத்தில் சிறுவயதில் அஜித்தாக நடித்து பிரபலமான ஜான் ராபின்சன், அதன் பிறகு ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த தனிஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமி சிறுவயது கதாபாத்திரத்தில் கொஞ்சம் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து பின்னிப் பெடல் எடுத்திருப்பார். அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றிருக்கும் ஜான் ராபின்சன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ படத்திலும் நடித்திருக்கிறார்.

விஷ்ணுவர்தன்: இவர் 1990 ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான சத்ரியன் படத்தில் விஜயகாந்தின் சிறுவயது பன்னீர்செல்வம் கேரக்டரில் பிரமாதமாக நடித்திருப்பார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மேலும் பிரபலமானார். இவர் பின்னாளில் பிரபல இயக்குனராக மாறி பில்லா, ஆரம்பம் போன்ற அஜித் படத்தை இயக்கிய இயக்குனராகவும் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவைக் கலக்கினார்.

இந்த 5 நடிகர்களும் சிறுவயது கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தியது மட்டுமல்லாமல், அதில் சிறப்பாக நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்தனர். அதைத் தக்க வைத்துக் கொண்டு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை மிக எளிதாக பெற்றனர்.

- Advertisement -spot_img

Trending News