செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கமலுடன் இணைந்து நடிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. விவேக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ஷங்கர்

Actoe Kamal: உலக நாயகன் என்ற பெயருக்கேற்ப பன்முக கலைஞனான நடிகர் கமல்ஹாசன் இதுவரை பல படங்களில் ஏறக்குறைய எல்லா நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடித்துவிட்டார். பல நடிகைகளின் கனவு நாயகன் என்றும் சொல்லும் அளவிற்கு கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நடிகைகள் இருக்க சில நடிகைகள் மற்றும் சில நடிகர்கள் அவருடன் இதுவரை இணைந்து நடிக்கவே இல்லை. அவர்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ரகுவரன்: மாஸான வில்லன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ரகுவரன். சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி கேரக்டரில் ரகுவரனின் படு அசத்தலான நடிப்பை நம்மால் மறக்கவே முடியாது. பல படங்களில் அப்பாவாக அண்ணனாக தன் குணச்சித்திர நடிப்பாலும் ரசிக்க வைத்தவர் ரகுவரன். ஆனால் இதுவரை இவர் கமல்ஹாசனுடன் ஒரு படமும் நடிக்கவில்லை. ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் கமலுடன் அவர் ஒரு படத்திலும் நடிக்கவில்லை என்பது ரகுவரன் ரசிகர்களுக்கு ஒரு குறையாகவே ஆகிவிட்டது.

நதியா: எண்பதுகளில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நதியா ரஜினியுடன் இணைந்து ராஜாதி ராஜா படத்தில் நடித்திருந்தார். கமலுடன் புன்னகை மன்னன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டாலும் சில காரணங்களினால் அவர் கமலுடன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு எம். குமரன் Slo மகாலெட்சுமி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்தார். இதுபோல் பல ஹீரோக்களுடன் பல சப்போர்ட்டிங் ரோலில் நடித்து கொண்டிருக்கிறார் நதியா. பாபநாசம் 2 திரைப்படத்தில் அவர் கமலுடன் நடிக்கப் போவதாக முதலில் கூறப்பட்டாலும் இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

Also Read: தலைநகரம் 2 விட 5 மடங்கு லாபம் பார்த்த வேட்டையாடு விளையாடு.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

நக்மா: ஷங்கர் இயக்கத்தில் காதலன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நக்மா. பிரபுதேவா, கார்த்திக், பிரபு, அஜித், சரத்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல நல்ல படங்களில் நடித்துள்ளார் நடிகை நக்மா. ரஜினியுடன் அவர் நடித்த பாட்ஷா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தெரிந்ததே. ஆனால் அவர் நடிகர் கமலுடன் இதுவரை எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. தீனா படத்தில் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நக்மா, தற்சமயம் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இனியும் படங்களில் தோன்றுவார் என்பது அரியதுதான்.

கனகா: தமிழ் திரையுலகம் மறக்க முடியாத மெகா ஹிட் படமான கரகாட்டக்காரன் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கனகா. முதல் படத்திலேயே பெயர் பெற்ற நடிகை கனகா, எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். அச்சமயத்தில் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது. ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், பிரபு, கார்த்திக் போன்ற பல ஹீரோக்களுடன் நடித்திருந்த நடிகை கனகா நடிகர் கமலுடன் மட்டும் ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை அதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை போலும்.

Also Read: போலீஸ் அதிகாரியாய் சூப்பர் ஸ்டார் கலக்கிய 5 படங்கள்.. 27 வருடத்திற்கு பிறகு ரஜினி ஏற்ற கதாபாத்திரம்

விவேக்: ஜனங்களின் கலைஞனான நடிகர் விவேக் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது தனித்துவமான நகைச்சுவை திறனாலும் நடிப்பாலும் பல உள்ளங்களை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்தவர் நடிகர் விவேக். பல முன்னணி ஹீரோ படங்களில் தனி காமெடி ட்ராக்கிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து புகழ்பெற்றவர் விவேக்.

கே.பி.யின் சிஷ்யரான இவர் கே.பியின் ஆஸ்தான நாயகன் கமலுடன் இணைந்து திரைப்படங்களில் இதுவரை நடிக்கவில்லை. அது தனக்கு ஒரு தனி குறையாக இருக்கிறது என்று அவரே கூறியுள்ளார். அந்தக் குறை தீர்த்த ஷங்கர் தன் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து அவரை நடிக்க வைத்தார். ஆனால் அப்படமே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்ட நிலையில் அவரை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் கண்டிப்பாக படத்தில் இடம் பெறும் என்று படத்தின் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read: விஜய் மறந்து போன 4 நடிகர்கள்.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி வாங்கிய மொக்கை

Trending News