சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பொது இடங்களில் அசிங்கப்பட்ட 5 நடிகர்கள்.. சிவகார்த்திகேயனால் அவமானப்பட்ட அருண் விஜய்

சில பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தாலும் ஒரு சில ஒழுங்கீன செயல்களால் அவர்களது மொத்த பெயரும் போய்விடும். அவ்வாறு தமிழ் சினிமாவில் ஒரு சில தவறான செயல்களால் தங்களது பெயரை கேடுத்துக்கொண்ட 5 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

மன்சூர் அலிகான் : ஒரு காலகட்டத்தில் வில்லனாக மிரட்டி வந்தவர் மன்சூர் அலிகான். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் ஓவராக குடித்துவிட்டு போதையில் பலரிடம் சண்டையிட்ட தனது பெயரை கெடுத்துக் கொண்டார். மேலும் சமீபத்தில் அரசியலிலும் இறங்கி கேலிகளுக்கு உள்ளானார்.

சித்தார்த் : அதிக பெண் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த். ஆனால் இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில ஏடாகூடமான கருத்துக்களால் தனது பெயரை கெடுத்துக் கொண்டு உள்ளார். அதாவது ஒரு முறை சாய்னா நேவால் பற்றி அசிங்கமாக பதிவிட்டிருந்தார். அதன் பிறகு அந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

அருண் விஜய் : ஹீரோவாக நடித்ததைக் காட்டிலும் தற்போது வில்லனாக ரசிகர்களின் மனதை ஓரளவு இடம் பிடித்திருந்தார் அருண் விஜய். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளியான போது அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் மாஸ் ஹீரோவா, மாஸ் ஹீரோ யார் என்று மக்களுக்கு தெரியும் என பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது இந்த பதிவை நான் போடவில்லை என சமாளித்து இருந்தார். சிவகார்த்திகேயனின் தான் மறைமுகமாக அருண் விஜய் இவ்வாறு சொல்லுகிறார் என ரசிகர்கள் வெறுப்படைந்தனர்.

பிரகாஷ்ராஜ் : வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். ஆனால் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தலைக்கனம் பிடித்த சினிமா ஷூட்டிங்குக்கு லேட்டாக வருவதாக அவர் மீது சமீபகாலமாக புகார் வந்த வண்ணமே உள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு இருந்த நல்ல பெயர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது

ஜெய் : ஆரம்பத்தில் ஜெய் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் தற்போது தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஜெய் குடித்து விட்டு நடுரோட்டில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு இனிமேல் நான் இப்படி செய்ய மாட்டேன் என போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனாலும் இந்த வீடியோ வெளியாகி ஜெய்க்கு மிகுந்த அசிங்கத்தை ஏற்படுத்தியது.

Trending News