Actor Kamal: குழந்தை நட்சத்திரமாய் தோன்றி அதன் பின் தன் திறமையை நடிப்பின் மூலம் வெளிக்காட்டி, தனக்கென ஓர் இடத்தை பிடித்த ஜாம்பவான் தான் கமலஹாசன். அவ்வாறு இருக்க, தன் தத்ரூபமான நடிப்பின் மூலம் நடிகர் திலகம் என பெயர் பெற்ற சிவாஜியின் மகனாய் கருதப்பட்டவர் கமல்.
அக்காலம் முதல் இக்காலம் வரை நடிப்பில் இவரை அடிச்சிக்க ஆளே இல்லை என மார் தட்டி கொள்ளும் அளவிற்கு நடிப்பில் சிறந்து விளங்கியவர் சிவாஜி. இவருக்கு பின் தமிழ் சினிமாவின் வாரிசாய் கருதப்பட்டவர் தான் கமலஹாசன். அந்த அளவிற்கு தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்.
Also Read: Bumper Movie Review- 8 தோட்டாக்கள் வெற்றிக்கு பம்பரா.? படம் எப்படி இருக்கு, முழு விமர்சனம் இதோ
விக்ரம்: ஆரம்பத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் இவருக்கு பெரிதளவு கை கொடுக்காத நிலையில், அதன்பின் சேது, அந்நியன் ,தெய்வதிருமகள், ஐ போன்ற படங்களில் இவர் ஏற்ற மாறுபட்ட கதாபாத்திரம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அதிலும் குறிப்பாக ஐ படத்தில் இவர் ஏற்ற தத்துரூபமான நடிப்பு காண்போரை வியப்பு கொள்ளச் செய்தது. கமலை போல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இவரும் ஒருவர்.
சூர்யா: இவர் நடித்த எண்ணற்ற படங்களில், மாறுபட்ட கதாபாத்திரம் ஏற்ற படங்களான பேரழகன், கஜினி, ஏழாம் அறிவு போன்றவை பேர் சொல்லும் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் விக்ரம் படத்தில் இவர் இடம் பெறும் ஐந்து நிமிட காட்சியான ரோலக்ஸ் கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். மேலும் தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமலுக்கு அடுத்து இவரை கூறலாம்.
Also Read: சறுக்கிய நேரத்தில் கை கொடுத்த கமல்.. ஆண்டவரை இம்ப்ரஸ் செய்த வினோத், KH 233 உருவான சீக்ரெட்
பகத் பாசில்: மலையாள படங்களில் முன்னணி கதாநாயகனாக ஏற்ற படங்கள் பெரிதளவு பேசப்படாவிட்டாலும், தற்பொழுது நெகட்டிவ் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு சமீபத்தில் விக்ரம் படத்தில் இவர் மேற்கொண்ட ஏஜென்ட் அமர் கதாபாத்திரம் இவருக்கு வெற்றியை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து இவர் ஏற்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். மேலும் குறிப்பாக கமல் வியந்து பார்த்த நடிகர்களில் இவரும் ஒருவர்.
தனுஷ்: தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் டாப் ஹீரோக்களில் இவரும் ஒருவர். இவர் ஏற்ற எண்ணற்ற படங்களில், நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிதும் பேசப்பட்ட படங்கள் தான் அசுரன் மற்றும் கர்ணன் அதை தொடர்ந்து தற்பொழுது அருண் மாதேஷ் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தை மேற்கொள்கிறார். அவ்வாறு தான் ஏற்கும் கதாபாத்திரம் ஆகவே மாறி அசத்தும் வல்லமை கொண்டவர்.
Also Read: லியோவால் த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து இயக்கம் ஒரே படம்
சிவகார்த்திகேயன்: தன் நகைச்சுவை உணர்வாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சிவகார்த்திகேயன். இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்களில், டாக்டர், டான் போன்ற படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது அதை தொடர்ந்து அடுத்த கட்ட பட வாய்ப்புகள் ஆன மாவீரன், அயலான், எஸ் கே 21 போன்ற படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அதிலும் குறிப்பாக எஸ்கே 21ல் கமலுடன் கூட்டணி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.