செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

70 வயதிலும் 30 வயது போல் இளமை மாறாமல் இருக்கும் 5 நடிகர்கள்.. செம ஃபிட்டாக இருக்கும் கமல்

5 Actors Look As Young:  திரையுலகில் இருக்கும் நடிகர்கள் 50 வயதை தாண்டினால் பீல்ட் அவுட் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு 70 வயதிலும் 30 வயது போல் இளமை மாறாமல் ஐந்து நடிகர்கள் இருக்கின்றனர். அதிலும் உலக நாயகன் கமலஹாசன் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை மெயின்டைன் பண்ணி செம ஹிட் ஆக இருக்கிறார்.

மம்முட்டி: மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டி தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் தேவராஜ் கேரக்டரில் நடித்ததில் மூலம் பரீட்சியமானார். இவரை ரசிகர்கள் ‘மம்முக்கா’ என்று தான் செல்லமாக அழைப்பார்கள். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சினிமாவிற்கு நடிக்க வந்த பிறகும் மம்முட்டி இன்றும் கதாநாயகனாக தொடர்ந்து நடிக்கிறார்.

அதிலும் இவருடைய நடிப்பில் வெளியான பீஷ்மா பர்வம், ரோர்சாக், நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் போன்ற படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் சமீபத்தில் வெளியான ‘காதல் தி கோர்’ படத்தில் ஜோதிகாவுடன இணைந்து நடித்த அசத்தினார். 72 வயதாகும் மம்மூட்டி இன்னும் இளமை மாறாமல் இளம் நடிகர்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் ஹீரோவாக தொடர்ந்து ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார்.

Also Read: 72 வயதிலும் சமீபத்தில் ஹிட்டு கொடுத்த மம்முட்டியின் 5 படங்கள்.. ஜோவுடன் அசத்திய காதல் தி கோர்

ஷாருக்கான்: 52 வயதாகும் ஷாருக்கான் இன்னும் கட்டுமஸ்தான உடல் அமைப்பில் இளம் நடிகர்களை எல்லாம் திணறடிக்கும் வகையில் ஹேண்ட்சம் லுக்குடன் இருக்கிறார். அதிலும் ஹிந்தி திரை உலகம் பாய்க்காட் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய சமீபத்திய பதான், ஜவான் போன்ற படங்கள்தான் இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து புது நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இப்போது இருக்கும் டாப் ஹீரோயின்களுடன் எல்லாம் ஷாருக்கான் தொடர்ந்து படங்களில் ஜோடி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கமல்: நான்கு வயதில் தனது திரைப்பயணத்தை துவங்கிய உலகநாயகன் கமலஹாசன் தற்போது 69 வயதானாலும் எந்த வேகத்தில் தன்னுடைய ஓட்டத்தை துவங்கினாரோ அதே வேகத்தில் தான் இப்போதும் சென்று கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர் என இவர் செய்யாத வேலையே கிடையாது. அதிலும் விக்ரம் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த கமல் இப்போது மணிரத்தினம் இயக்கும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார்.

இளமையை அப்படியே மெயின்டைன் பண்ணும் நடிகர்கள்

அனில் கபூர்: 66 வயதாகும் அனில் கபூர் நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் கொண்டிருக்கிறார். மேலும் 110°-யில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பதிவிட்டு தன்னுடைய கட்டுக்கோப்பான உடலமைப்பை மெயின்டைன் செய்து வருகிறார். இவரைப் பார்த்தால் 30 வயது இளைஞர் போல் தெரிவார். அந்த அளவிற்கு சமீபத்திய படங்களில் ஹாண்ட்சம் லுக்குடன் காட்சியளிக்கிறார்.

Also Read: 68 வயதில் செய்யக்கூடாததை செய்யும் கமல்.. படாதபாடு பட்டதால் வந்த வினை

சைஃப் அலி கான்: பாலிவுட் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் நடிகை கரீனா கபூரை 2வது திருமணம் செய்து கொண்டார். 53 வயதாகும் சைஃப் அலி கான் இப்போதும் செம ஃபிட் ஆக இருக்கிறார். இதனால் இவருக்கு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது. இவர் படங்களில் மட்டுமல்ல நிறைய விளம்பரங்களிலும் நடித்து கல்லா கட்டுகிறார். இவருடைய இளமையான தோற்றத்தால் இப்போது இருக்கும் இளம் டாப் ஹீரோக்களுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் நடிகராக பார்க்கப்படுகிறார்.

Trending News